Wednesday, October 14, 2009

சதுரங்க நாயகி


கருப்புக் குதிரையில்
நான் நான்கு கட்டங்கள் தாவுகிறேன்
வெள்ளை யானையில் நீ
வேகமாய் எதிர்பக்கம் கடந்துவிடுகிறாய்
உன் வேகத்தை நிகர்செய்ய முற்பட்டு
கோட்டையை நகர்த்துகிறேன் உன் பக்கமாய்
மறைந்திருந்த உன் வெள்ளை குதிரைகளுள் ஒன்று
கோட்டையை ஆட்டத்திலிருந்து வெளியேற்றுகிறது
தற்காப்பு ஆட்டமுறையாக
வெறும் சிப்பாய்களை மட்டும்
ஒவ்வொரு கட்டமாய் நகர்த்திவைக்கிறேன்
எதிர்பார்க்காத ஒரு கணத்தில்
இன்னும் நான்கு நகர்த்துதலில் ஆட்டம் முடியும் , என்கிறாய் நீ .
காய்களை இழக்காமல் தோற்கடிப்பதெப்படி என்ற
உன் சதுரங்க தந்திரங்களை அறியாமலே
தோற்றும் போகிறேன் நான் .

11 comments:

Anonymous said...

Nice game....
Enjoy it...

ஜெனோவா said...

Thanks anony friend!!

ப்ரியமுடன் வசந்த் said...

வாசிச்சதிலே ரொம்ப பிடிச்ச கவிதை நண்பா..தொடர்ந்து எழுதுங்க வார்றேன் வந்து வாசிக்கிறேன்....

ஜெனோவா said...

வாங்க வசந்த், உங்களோட ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி!
தொடர்ந்து கண்டிப்பா எழுதுவேன் !

நன்றி

நர்சிம் said...

வெகு நாட்கள் ஆகும் உங்களின் இந்தக் கவிதை மனதை விட்டு அகல.

எனக்கு மிகப் பிடித்திருந்தது.

ஜெனோவா said...

நர்சிம் ஜி , மிக்க நன்றி !
நாம் மிகவும் மதிக்கும் அல்லது விரும்பும் ஒரு நபரின் கருத்துக்கள் நம்மை நிச்சயம் ஆனந்தபடுத்தும் என்பதை இப்போது உணர்கிறேன் !!

நன்றியும் வாழ்த்துக்களும் ஜி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மிக அழுத்தமான கவிதை. வாழ்த்துகள்

-ப்ரியமுடன்
சேரல்

ஜெனோவா said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சேரல் !!

Anonymous said...

The person who made you to play this game will definitely not allow u to flunk.

congrats for சதுரங்க நாயகி published in Anantha Vegadan.

இரசிகை said...

hey........

ithaiththaan naan vaasiththen.

i just enjoyed:)

ஜெனோவா said...

Thanks annony friend !
Thanks Rasikai !