Tuesday, October 20, 2009

ரெண்டாந்தரம்



கடைசி வார சந்தையில்
வாங்கித்தருவதாய் சொல்வாள் அம்மா .
பொத்தான்கள் இல்லாத
அண்ணனின் பழைய பள்ளிச்சீருடைகள்தான்
எல்லா வருட பள்ளி முதல் நாளிலும் .

பழைய புத்தகத்தில் படித்தால்
நிறைய குறிப்புகள் கிடைக்குமென்பார் அப்பா.
அக்கா படித்துக்கிழித்த பழைய தமிழ் புத்தகத்தில்
கடவுள் வாழ்த்தும் இன்னும் பல செய்யுள்களும்
எப்போதுமே கிழிந்து போயிருக்கும் .

அம்மா தரும் எட்டணாவில்
ஒன்னுக்கு இடைவெளியில் அண்ணனிடம் போனால்
அஞ்சு கல்கோனா முட்டாய்கள் வாங்கி
ரெண்டு மட்டும் தருவான்.
அக்கா பாதிகடித்த புளியங்காய் தருவாள் .

அண்ணன் இந்த வருடம்
கல்லூரி செல்வதாய் கூறி
ஒருவருடம் கடையில் நிக்க சொன்னார் அப்பா .
அக்காவும் படிக்க ஆசைப்பட்டபோது
நான் கடையிலே நின்று விட்டேன் .

மேலத்தெரு செல்வியின்கணவன்
இறந்தது தெரியுமென்றாலும்
காதலிப்பதாய் சொன்னபோது ஒத்துக்கொண்டாள்.
அப்பாதான்
மானத்தை வாங்கிவிட்டதாய் சொல்லி
அடித்து விரட்டிவிட்டார் வீட்டைவிட்டு .

14 comments:

Anonymous said...

Nalla irukku joe...
Keep writing...

ஜெனோவா said...

Thanks Anony friend ;-)

மண்குதிரை said...

nalla irukku nanba

ஜெனோவா said...

மண்குதிரை , ரொம்ப நன்றி நண்பா !
தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் , எழுத முயற்சிக்கிறேன் .

நன்றி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இப்பொழுதுதான் முதன் முறையாக உங்கள் வலைப்பூவுக்கு வருவதாய் நினைவு. இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

ஜெனோவா said...

உங்கள் கவிதைகளின் ரசிகன் நான் சேரல் !
உங்களின் முதலாம் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி , தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்கள் .

நன்றி சேரல் !!

Jerry Eshananda said...

இளம் வயதிலேயே என்னை வசிகரித்த பெயர். எம்.ஜி.யார் நடித்து "ஜெனோவா "என்ற பெயரில் ஒரு படம் வெளி வந்திருக்கிறது. அப்போதிலிருந்து இந்த பெயர் என்னை என்னவோ செய்யும். உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்முத்துகள். குறிப்பாக "காக்கை கூடு" மைன்ட் ப்ளோவிங். ஐ லவ் ஜெனோவா

Jerry Eshananda said...

ரெண்டாந்தரம் "முதல் தரமாய் இருக்கிறதே ஜோ." பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள். தொடர்வோம்.

தமிழினிமை... said...

vaazha valamudan jenova...rombavum naesiththaen indha kavidhayai...niraya ezhudhungaL.

ஜெனோவா said...

ஜெரி ஈசானந்தா சார் , மிகவும் மகிழ்ந்தேன் உங்கள் இடுகையை பார்த்து .மிக்க நன்றி !

"ஜெனோவா " என்பது பழைய ஒரு தமிழ் படத்தின் பெயர் என்பது புதிய தகவல், ஆனால் அம்மையின் பெயர் தெரிந்த குழந்தைப் பருவத்திலிருந்தே இது எனக்கு கள்ளூறும் பெயர் ;-)

மீண்டும் ஒருமுறை உங்களது ஊக்கங்களுக்கு நன்றி சார் , நிச்சயமாய் தொடர்வோம் .

ஜெனோவா said...

தமிழினி , வாழ்க வளமுடன் !
உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி . தொடர்ந்து எழுதி மகிழ்வோம் !!

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

good to read..

ஜெனோவா said...

வாங்க வசந்தண்ணே , ரொம்ப நன்றி !!

Venkata Ramanan S said...

ஆயிரம் அர்த்தங்கள்