சத்தம் கேட்டு புறக்கடைக்கு ஓடுவதற்குள்
செவலை நிற குஞ்சியை மட்டும்
காகமோ பருந்தோ தூக்கிவிட்டுப் போனதை
கடிதத்தில் எழுதியிருந்தாள் அம்மா.
பறிகொடுத்த ஆத்திரத்திலும்
பயத்திலும் கெக்கரித்து
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
தாய்க்கோழியின் கண்கள் மனதில் வந்தன.
இனிமேல்
படியில் தொங்கிக்கொண்டு போகக்கூடாதென
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் .
11 comments:
Nice...
நன்றாக இருக்கிறது...
ரொம்ப நன்றி , அனானி நண்பரே !
வாங்க பிரியா , ரொம்ப நன்றி !
wow ithu nalla irukku nanba
நன்றி மண்குதிரை !!
வாழ்த்துக்கள் , தொடர்வோம் !!
அழகா இருக்கு..படமும் கவிதையும்
வாங்க வசந்தண்ணே , ரொம்ப நன்றி !!
நல்ல உணர்வு தோழரே! உங்கள் நடையும் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
Nanri sEral, thodarvom
....
மிகவும் அருமை ஜோ...
....
நன்று
Post a Comment