என்னை
பார்த்து பார்த்து அழுவதற்கென்றே
எப்படியாவது
ஒரு குழந்தையேனும் பயணிக்கிறது
என் எல்லா ரயில் பயணங்களிலும் .
***********************
பூச்சாண்டிட்ட புடிச்சு குடுத்துருவேன்னு சொல்லி
என்னை காண்பித்தபோது
பருப்பு பிசைந்த சோற்றில் பாதியை
பயந்துகொண்டே
விழுங்கியது பக்கத்துவீட்டுக் குழந்தை .
*************************
மறைந்தும்
பின் வெளிவந்தும்
மாறி மாறி
பளித்து விளையாடிய குழந்தையை
பதிலுக்கு பளித்தபோது
சந்தோசத்தில் சிரித்து ஒளிந்துகொண்டது .
20 comments:
Cute Kavidhaigal.....
Thanks Anony Friend!
பார்க்க ரொம்ப பயங்கரமா இருப்பிங்களோ...பாவம் அந்த குழந்தைகள் !
பிரியா ,
எனக்கு தலைநகரம் பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது ,
"பில்லா பயங்கர கருப்பா இருப்பான் - நீ கருப்பா பயங்கரமா இருக்க ", வடிவேலுவிடம் மனோபாலா சொல்வதாக அமைந்திருக்கும் இந்த வசனம் .
அதேமாறி நானும் கொஞ்சம் பயங்கரமாத்தான் இருக்கேன் போல , அப்பப்ப இந்த குழந்தைகள் நம்பள பார்த்து வீறிட்டு அழும்போதுதான் தெரிகிறது !! ;-))
வாழ்த்துக்கள்
அப்போ, ஒரு சின்ன வேண்டுகோள்... தயவுசெய்து குழந்தைகள் இருக்கும் பக்கம் போகவே போகாதிங்க. நான் குழந்தைகளை ரொம்ப நேசிக்கிறேன், அவர்களை இப்படியெல்லாம் பயமுறுத்த வேண்டாமென்று நினைக்கிறேன்.
முதல் கவிதை Top!
பிரியா , வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் ;-)
அன்புடன் மணிகண்டன் , நன்றி நண்பா !
வாழ்த்துக்கள்
கவிதை is Cute and beautiful,so ஜெனோவா cute dhan....
வாழ்த்துக்கள்
அனானி நண்பரே , எதுக்கு இந்த கொலைவெறி ;-)
தியாவின் பேனா , வாழ்த்துக்கள் நண்பரே !
அனானி நண்பரே , எதுக்கு இந்த கொலைவெறி ;-)
தியாவின் பேனா , வாழ்த்துக்கள் நண்பரே !
very very cute da...
picture is also very relevent to second one....
so order maathi iruntha innum super ah irunthirukkum....
நன்றி அனானி நண்பரே !
so cute poems...
முதல் ரசனை
இரண்டாவது சுயமா? பயமா?
மூன்றாவது மகிழ்ச்சி..
ரெண்டாவது சுயமும் பயமும் நண்பா !
வருகைக்கு நன்றி !
wow romba nalla irukku
நன்றி நண்பா !
swaarasyam....:)
Thanks Rasikai!
Post a Comment