Monday, January 4, 2010

கற்பனையில் ஒரு மிருகம் !

உறக்கத்தில்
ஆளை விழுங்கிவிடும்
அபூர்வ மிருகமொன்று நகருக்குள்
அலைகிறதாம் .
பதிலாவது குறுக்குத்தெருவில்
ரெண்டுபேரும் ,
அடுத்தத் தெருவில் ஒரு
கூலித்தொழிலாளியும் ,
நேற்று இரவில் கடிபட்டார்கள்
என்கிறார்கள் .
மாயை போன்று வருவதும்
போவதும் தெரியாமல்
தூங்கினால் மட்டுமே வருமந்த
மிருகம் கடித்து
உயிர்பிழைத்தவர்கள் பிற்காலத்தில்
பெரிய ஆட்களாகவும் ஆக
வாய்ப்புகள் நிறைய உண்டாம் .
நான்
தூங்குவதுபோல நடிக்கப்போகிறேன்,
கடிபட்டவுடன் மிருகத்தை
ஏமாற்றிவிட்டு சட்டென்று எழுந்து ஓட
வசதியாக இருக்கும் !

14 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா இருக்கு...!

கனவை பற்றிய கவிதையா ஜெனோ?

இரசிகை said...

ENNA SOLLA........

M..OK!

tt said...

படிமம் நன்றாக இருக்கிறது..

Anonymous said...

Nice Joe....

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் வரிகள்...

ஜெனோவா said...

@ நன்றி வசந்த் ... கிட்ட தட்ட ..
@ நன்றி இரசிகை
@ நன்றி தமிழ்
@ நன்றி அனானி
@ நன்றி சங்கவி

Priya said...

//மிருகம் கடித்து
உயிர்பிழைத்தவர்கள் பிற்காலத்தில்
பெரிய ஆட்களாகவும் ஆக
வாய்ப்புகள் நிறைய உண்டாம் .
நான்
தூங்குவதுபோல நடிக்கப்போகிறேன்,
கடிபட்டவுடன் மிருகத்தை
ஏமாற்றிவிட்டு சட்டென்று எழுந்து ஓட
வசதியாக இருக்கும் !//.....ஓகே, எப்படியோ மிருகத்திடம் கடிப்பட்டாவது பெரிய ஆளாவந்தா சரிதான்:-)

நல்லா எழுதியிருக்கீங்க ஜோ!

"உழவன்" "Uzhavan" said...

ஹா..ஹா.. நல்லாருக்கு.
அதுவும் கடிப்பதுபோல் நடித்துவிடாம :-)

ஜெனோவா said...

நன்றி பிரியா !
நன்றி உழவன் சார் ! உங்க பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன் ;-))

கமலேஷ் said...

அருமையான கவிதை...மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது...வாழ்த்துக்கள்..

Bharathi said...

Nice one .....

ஜெனோவா said...

நன்றி கமலேஷ் , முதல் வருகைக்கும் கருத்துக்கும் ! தொடர்வோம் ;-)

நன்றி பாரதி !

Marimuthu Murugan said...

அருமை ஜோ....
நல்ல கற்பனை...

ஜெனோவா said...

நன்றி நண்பா !