வயிறு பெருத்தலையும் கனவான்களின்
வீடிருக்கும் வீதியொன்றில்
நடக்க நேரிட்டபோது
ஆச்சர்யம் விலகாமல் அடுக்குமாடிகளை
பார்த்துக்கொண்டிருந்தேன்
அகலமான தெருவின் மீது
கருப்பு வண்ணத்தில் தார் பூசப்பட்டிருந்தது
தார் பூச்சின் ஓரங்களில் அவரவர்க்குப்
பிடித்தவண்ணத்தில் குறைந்தப்பட்சம்
ஒரு சீரூந்தாவது நின்றிருந்தது
மடிப்புக் கலையாத உடையில்
பாட்டுக்கேட்டபடி
நடை பயிற்சியிலிருந்தார் ஒருவர்
கருப்பு கழுத்துப் பட்டை அணிந்த
நாயை கையில் பிடித்தபடி
அருகில் ஒரு பெண்ணும் இருந்தாள்
சிவப்பு பூக்கள் பூத்திருந்த
மரத்தினடியில் ஒரு
பணக்கார குப்பைத்தொட்டி வீங்கியிருந்தது .
சுற்றுச்சுவர் வாசலில்களில் தவறாமல்
தொங்கிய அஞ்சல் சேகரிப்புப் பெட்டியும்
நாய்கள் ஜாக்கிரதை அறிவிப்பும் என்னை
சற்று தள்ளி நடக்க வைத்தது
அம்மன் கோவில் தீமிதிப்பு மாதிரி
பட்டும் படாமலே நடந்து
கார்கள் , நாய்கள்
பெண்கள் , வீடுகள் எல்லாம் பார்த்து
பிரம்மித்து தெருவின் முனையைத்
தொட்டபோது
உதடோடு உதடுவைத்து ஒரு ஜோடி
முத்தமிட்டுக்கொண்டிருந்தது அந்த
அதிகாலையில் !
செல்ஃபி
1 month ago
6 comments:
கிரேட் observation நண்பா...
இதே அனுபவம் தான் எனக்கும்...(எது ..தெருவுல சுத்துறதா??)
//சீருந்து.... (மகிழ்வுந்து?? )// இப்பதான் கேள்விப்படறேன்...
//பணக்கார குப்பைத்தொட்டி// பிடித்திருந்தது ....
ரொம்ப நல்லா இருக்கு
ஆனால் வெறும் விவரிப்பு தரும் படிமம் கடந்து எதை எதிர்பார்க்கிறது இந்த மனசு ?
:)
Nice JOE...
படிக்கும் போது நானும் அந்த பெருவீதியிலே நடந்துவந்த ஒரு உணர்வு...நைஸ்!
காலங்காத்தாலேயேவா :-)
நல்ல விவரிப்பு ஜெனோவா
மாரிமுத்து , நன்றி நண்பா !
நேசாண்ணே, விவரிப்பின் களிமுகம் வழியாக சமுத்திரத்துக்குள் நுழைந்து சாக்கடை கலக்குமிடம் உப்பு கரிக்குமா என பார்க்க முற்ப்பட்டது மனது ...(மாடிகள் மட்டுமே அடுக்கடுக்களாக கட்டப்பட்டுள்ளன அந்த வீதியில் ).. ;-) நன்றி அண்ணே !
நன்றி அனானி !
நன்றி பிரியா !
நன்றி உழவன் அண்ணே ! ஆமாண்ணே .. காலங்காத்தாலே ;-))
Post a Comment