பச்சையம் நீர்த்து உதிர்ந்துகொண்டிருக்கும்
இலையொன்றினை
முதுகில் சுமந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும்
காற்றுக்கு
உச்சிக்கிளையில் தரையென இறங்கி
பின் கிளையென உணர்ந்து
தரைதொட கிளை படரும்
மழை நீருக்கு
மலைகளென நினைத்து கணுக்களையும்
குகைகளென பொந்துகளையும்
தாண்டி ஊர்ந்து பயணித்த
எறும்புக்கு
வண்ணங்கள் பிடிபடாமல்
பாளங்கள் பிளந்த மரப்பட்டையின்
உள்ளிருந்து எட்டிபார்க்கும்
கெவுளிக்கு
ஓர் இணைப்பறவைகளின் கொஞ்சலில்
முறிந்த முந்தைய காதலை
கடன்வாங்கிக் கொண்டிருந்த
எனக்கு என
எல்லாருக்கும் மரமாகி நிற்கிறது
இந்த மரம் வீட்டுவாசலில் !
செல்ஃபி
1 month ago
12 comments:
நல்லாயிருக்கு ஜெனோ!!
//இலையொன்றினை
முதுகில் சுமந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும்
காற்றுக்கு //
//மலைகளென நினைத்து கணுக்களையும்
குகைகளென பொந்துகளையும்
தாண்டி ஊர்ந்து பயணித்த
எறும்புக்கு //
//முறிந்த முந்தைய காதலை
கடன்வாங்கிக் கொண்டிருந்த
எனக்கு//
திரும்ப திரும்ப படிக்கத் தூண்டும் சூப்பரான வரிகள் நண்பா...
(விகடனுக்கு அனுப்பலாமே..)
அது எப்படி ஜோ, நீங்க மட்டும் ரொம்ப வித்தியாசமாவே எழுதுறீங்க!
//ஓர் இணைப்பறவைகளின் கொஞ்சலில்
முறிந்த முந்தைய காதலை
கடன்வாங்கிக் கொண்டிருந்த
எனக்கு என//....
ரொம்ப அழகா இருக்கு இந்த வரிகள்...
நிச்சயமா, இந்த இணைப்பறவைகளின் கொஞ்சலில்..முறிந்த காதலை உங்களுக்கு மட்டுமா.... எல்லோருக்கும் நினைவுப்படுத்தும்!!!
Very nice....
-yel
ரொம்ப நல்லா இருக்கு ஜெனோ
உங்களுக்கு பதில் எழுதத்தான் நேரம் இல்லாம கிடக்கு வேலை அதிகம் நண்பா
வித்தியாசமா இருக்கு நண்பா உங்க வரிகள்...
மிக்க நன்றி தமிழ்! என்ன ஆளையே காணோம் கொஞ்ச நாளா ?
ரொம்ப நன்றி மாரி! அலைபேசி எண் எங்க நண்பா ?, மெயில் பண்ணு ..
ரொம்ப நன்றி ப்ரியா! எல்லாம் உங்க ஆசிர்வாதந்தான் ;-)
நன்றி அனானி நண்பர் ! கீழே இருக்கும் உங்கள் பெயர் சரியாக பிடிபடவில்லை ;-)
நேசா அண்ணே , எந்த வருத்தமும் இல்லை , மெதுவாக எழுதுங்கள் ( நேரம் கிடைக்கும்போது ) ஆனால் எழுதுங்கள் .. எதிர்பார்த்து இருப்பேன் , நன்றி அண்ணே !
மிக்க நன்றி சங்கவி நண்பா !
அற்புதம் ஜெனோ.. ரொம்ப ரசித்தேன்
வாங்க உழவன் சார் , ரொம்ப நன்றி !
ரொம்ப பிடிச்சிருக்கு ஜெனோ.
பா.ரா ரொம்ப நன்றி! ;-))
kaatchi virikirathu...azhagaai:)
Post a Comment