ஓர் அழகிய வண்ணத்தாளில்
கவிதையாக
கிறுக்கியிருக்கலாம்
ஒரு சில்வண்டின்
ரீங்காரம் போல
பாடிக்காட்டியிருக்கலாம்
தீர்ந்துபோன குவளைத்தண்ணிரின்
கடைசி சொட்டில் விரல் நனைத்து
தரையில் எழுதியிருக்கலாம்
மெல்லிய ராகமாய்
அவளின் காதருகில்
முணுமுணுத்திருக்கலாம்
காதலியின்
பெயரை வைத்துக்கொண்டு
இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம்
எங்கெங்கோ சுற்றித்திரியும்
இந்த
ரயில்வண்டியின் கழிவறையில்
காதலியின் பெயரெழுதிச்
சென்றவனை
என்ன செய்யலாம் ?
செல்ஃபி
1 month ago
8 comments:
//காதலியின் பெயரை முன்வைத்து ...//... நீங்களும் இப்படி ஏதாவது கிறுக்கியதுண்டா...?
//ரயில்வண்டியின் கழிவறையில்
காதலியின் பெயரெழுதிச்
சென்றவனை
என்ன செய்யலாம் ?//.... ஆமா ஜோ, என்ன செய்யலாம்? நீங்களே சொல்லிடுங்க.
Nice Joe....
காதலியின் பெயரை வைத்துக்கொண்ட
ரயில்வண்டிய என்ன செய்யலாம்?
-yel
:)
kazhivaraiyum...
kavi araiyaahip poivittatho...
anthak kaathalanukku..?
or
kazhivaraiyaiyum
kaviyaraiyaakkum kaathalin muyarchchiyo.....?
athuvum illaatti........
athu nichchayamaagave kaathaliyin peyaro illai kai vittavalin peyaro.
yethu yeppadiyo jenova sir..,
kavithai nallaayirukku
:))
ஜெனோ
அருமை ...
ரொம்ப பிடித்திருக்கிறது இந்தக் கவிதை
ரொம்ப பிடிச்சிருக்கு ஜெனோ!
நச்....ஜோ...
//தீர்ந்துபோன குவளைத்தண்ணிரின்
கடைசி சொட்டில் விரல் நனைத்து
தரையில் எழுதியிருக்கலாம் //
ரொம்ப நல்லாருக்கு ஜெனோ :-)
மிக்க நன்றி பிரியா ! பதில் அனுப்பியாச்செ ;-)
மிக்க நன்றி அனானி!
மிக்க நன்றி இரசிகை !
மிக்க நன்றி நேசா அண்ணா!
மிக்க நன்றி பா.ரா!
மிக்க நன்றி நண்பா !
மிக்க நன்றி உழவன் சார் ;-)
Post a Comment