"நாலு நாள் கழிச்சி வந்து வாங்கிக்கப்பா " என்று
பால்காரனிடம் சொல்லும்
அதே பதில்
கொஞ்சம் தொனி மாறி
"நாலாந் தேதிக்கப்புறம் தந்துடுறேன் "
என்றாகிப்போகும் வட்டிக்காரனிடம் .
நாலாம் தேதியும்
மாமா பூ வாங்கிவரவில்லையெனில்
ரெண்டு தெரு தாண்டிச்சென்று
கோமதி அக்காவிடம் அதே
"நாலு நாள் மந்திரத்தை"
சொல்லவேண்டியிருக்கும் .
நாலு நாலு நாட்களாகவே
தொடரும் அக்காவின் மாதம்
மாதக்கடைசி வரும்போது
ஏழாவது முறையாக
மீண்டும் ஆரம்பிக்கும்
வெவ்வேறு தொனிகளுடன் !
சுவரில் ஆடும் நிழல்
4 days ago
9 comments:
யதார்த்தம்
மிக யதார்த்தமான வாழ்க்கை முறையை அழகா எழுதி இருக்கிங்க ஜோ!
innilaiyaik kadanthu sellaatha vaazhvaip petra manitharkal migak kuraivuthaan...........:(
Very nice..
-yel.
//நாலாம் தேதியும்
மாமா பூ வாங்கிவரவில்லையெனில் ///
என்னமா உள் குத்து குத்துரிங்க
பெரும்பாலும் வாழ்க்கை இப்படித்தான் போகிறது..
நன்றி பத்மா !
நன்றி பிரியா !
நன்றி இரசிகை !
நன்றி yel!
நன்றி மங்குனி அமைச்சரே !
நன்றி உழவன் ,என்ன செய்ய .. இப்படித்தான் போகுது ;-(
கனக்கிறது
நன்றி வேல்கண்ணன் !
Post a Comment