Monday, June 14, 2010

மறக்கும் நோக்கில் !




பொழுதுக்கு ஒன்றாய்
விழுங்கும் மாத்திரைகளை போல இருக்கிறது
உன்னை மறப்பதற்கு
நீ கற்றுத்தரும் வித்தைகள் .

கெட்ட கனவாக நினைத்து
நீ சொன்னதுபோலவே
கனவுகளை சாகடித்துவிடுவேன்
நினைவுகளை என்ன செய்ய ?

காதலின் வீரியத்திலிருந்து
விளைந்த மரம்
முன்னெப்போதுமில்லாத அளவிற்கு
மௌனத்தின் விதையாகிறது.

மறந்துவிடும் நோக்கில்
எங்கெல்லாமோ சுத்துகிறது உடல்
நிழல் நீ என்பதை
மறந்துவிட்டு .

பீறிடும் அழுகையை
குமுறிடும் நெஞ்சை
பிரிந்திடும் உன்னை
என்னசெய்வதென்று தெரியவில்லை

"பெருவாழ்வு வாழ்வாய்" என
வாழ்த்தி செல்கிறாய் - சென்று வா
தண்ணீருக்குள் வளர்ந்தாலும்
பட்டமரம்தான் இனிமேல் நான் .

8 comments:

கமலேஷ் said...

அழகான சொல்லாடல்கள் நண்பா...கவிதை ஒரே சீராக பேசுகிறது...
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

Unknown said...

பாஸ் செமையா இருக்கு. :-)

Marimuthu Murugan said...

எங்கிருந்தாலும் வாழ்க :(
:(
:(


//பொழுதுக்கு ஒன்றாய்
விழுங்கும் மாத்திரை//

//கனவுகளை சாகடித்துவிடுவேன்
நினைவுகளை என்ன செய்ய ?//

நச் நண்பா...

tamizh said...

//பீறிடும் அழுகையை
குமுறிடும் நெஞ்சை
பிரிந்திடும் உன்னை //

வலிக்கும் வரிகள் !

"உழவன்" "Uzhavan" said...

இப்படிப்பட்ட நிலைமையை இதைவிட பெரிதாய்ச் சொல்லிவிடவே முடியாது என்றே சொல்லலாம். அருமை ஜெனோ

Anonymous said...

எதுவும் கடன்து பொவீர்கல்...

நளினி சங்கர் said...

மிகவும் அருமை... என்னை மிகவும் கவர்ந்த வரிகள்...

/////தண்ணீருக்குள் வளர்ந்தாலும்
பட்டமரம்தான் இனிமேல் நான்////

Gnani said...

நண்பா... நிஜத்தோடு நிழல்களுடனும் வாழ கற்றுக்கொள், நிஜம் பொய்த்தாலும் நிழலின் நினைவுகள் பொய்க்காது !! உன் தலையனையை கேட்டால் தெரியும் போல் உன் கண்ணீர் கதைகள் !!! LOL