அம்மா
எல்லா உபாதைகளுக்கும்
ஏதேனும் ஒரு கைமருந்து வைத்திருப்பாள் .
தின்னது செரிக்காமல்
வயிறு ஊதிக்கொண்டு அசமந்தமாக இருந்தால்
இஞ்சி போட்டு இடிச்சி
கைவசம் கசாயம் தயாராக இருக்கும் .
வேப்பிலை, மஞ்சளோடு
காட்டு நொச்சியையும் சேர்த்துப் போட்டு அவிச்சி
இரண்டு வேளை ஆவி பிடித்தால்
தலைவலியோ , பாரமோ காணாமல் போய்விடும் .
நெருஞ்சி முள் போல
உடம்பெல்லாம் சொறி எடுத்தால்
குப்பைமேனி கீரை அரைத்து
உடம்பெல்லாம் பூசி குளிக்கவைப்பாள்.
கத்திவெட்டுக்கு காபித்தூளும்
காலில் முள் தைத்தால் எருக்கலம்பாலும்
மணத்தக்காளி கீரையும் கூட
அம்மாவின் கண்டுபிடிப்புகள்தான் .
எல்லாத்துக்கும் ஒரு கைமருந்து வைத்திருந்தாலும்
இப்போவரை அம்மாவிடம் மருந்தில்லாத ஒரே உபாதை
தினந்தோறும் சாயங்காலம் ஏழு மணிக்கு வந்துபோகும்
அப்பாவின் குடிப்பழக்கம் மட்டும்தான் .
சுவரில் ஆடும் நிழல்
4 days ago
14 comments:
இத்தனை பிரச்சனைகளா உடம்புல...
நல்லவேளை அம்மாக்கு கைவைத்தியம் தெரிந்திருக்கு.
நல்லா இருக்கு.
நன்றாகவுள்ளது நண்பரே.........
வைத்தியத்தோடு வாழ்வியலும் எடுத்தியம்பும் உத்தி அழகு.
நல்லா இருக்கு மச்சி
வழக்கம் போல
கலக்கிட்ட....
வாங்க பிரியா , அதெப்படி எப்படி பந்து போட்டாலும் சிக்ஸர் சிக்ஸர்ஆ அடிக்கிறீங்க ;-))
உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன் ( எப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கவேண்டிருக்குப்பா )
நன்றியும் வாழ்த்துக்களும் .
மிக்க நன்றி முனைவர் அவர்களே , தொடர்வோம் !
மிக்க நன்றி நண்பா .
வாழ்த்துக்கள்
வேப்பிலை, மஞ்சளோடு
காட்டு நொச்சியையும் சேர்த்துப் போட்டு அவிச்சி
இரண்டு வேளை ஆவி பிடித்தால்
தலைவலியோ , பாரமோ காணாமல் போய்விடும் .
Will be very helpful for you.....
Take it...
எவ்வளவு இயல்பு!எவ்வளவு கவிதை!
அனானி நண்பர் , நன்றி !
பா.ரா அண்ணே , மிக்க நன்றிண்ணே ! ;-)
அனானி நண்பர் , நன்றி !
பா.ரா அண்ணே , மிக்க நன்றிண்ணே ! ;-)
nallaayirukku.........
அருமை
நன்றி இரசிகை !
நன்றி திகழ் !
அம்மாவின் அன்பு பூசிய கைவைத்தியம் போல் வேறு மருந்தில்லை.ஒருவேளை அப்பாவின் அம்மா மருந்து தந்தால் மாறக்கூடுமோ அப்பாவின் மாலை நேரப்பழக்கம்?அற்புதம் ஜெனோ.
Post a Comment