Sunday, January 3, 2010

மாற்று யோசனை !

மீதிச் சில்லறையாக
பழைய
ஐந்து ரூபாயை தரப்பார்த்தார் .
ரொம்பவும் கிழிந்த
நோட்டை வாங்க மனசில்லாமல் ,
என்ன செய்வதென்று
யோசித்து
பின்
இன்னொரு
சிகரெட் பிடிக்கவேண்டியதாய்ப்
போயிற்று !

( 2009 இன் கடைசி பிரதி ஆனந்த விகடனில் வெளிவந்த என்கவிதை இது )

14 comments:

நேசமித்ரன் said...

யதார்த்த வாழ்வியலின் மிக நுண்ணிய வெளிப்பாடு ஜெனோ

tt said...

ஆரோக்கியத்தை விட்டுத் தர மனசில்லாமல் போவது எப்போது?

Anonymous said...

Very realistic...
Keep Writing...
Congrats..

Marimuthu Murugan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா......
//யதார்த்த வாழ்வியலின் மிக நுண்ணிய வெளிப்பாடு //
வழிமொழிகிறேன்....



(ஆமா ...எப்பர்ந்து இந்த பழக்கம்...?)

ஜெனோவா said...

ரொம்ப நன்றி நேசாண்ணே!

ரொம்ப நன்றி தமிழ் ! ( அப்படி மனசு வந்து கொஞ்ச நாள் ஆச்சு , இது கொஞ்சம் பின்னோக்கிய நினைவு ;-) )

நன்றி அனானி நண்பர் !

ரொம்ப நன்றி மாரி! ( கொஞ்ச நாளா டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு இப்ப விட்டாச்சுப்பா ! ;-) )

இரசிகை said...

ரொம்ப நன்றி மாரி! ( கொஞ்ச நாளா டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு இப்ப விட்டாச்சுப்பா ! ;-) )

kavithaiyai vida ithu nice...)

Priya said...

ஹாய், எங்க போய்டீங்க? ரொம்ப கொண்டாட்டத்தில இருந்திருக்கீங்க போலிருக்கு:‍)
உங்களுக்கும் உங்க குடும்பத்தினர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

உங்க மாற்று யோசனை வித்தியாசமாதான் இருக்கு,(ஆனா ச‌ரியாதான் இல்ல!) ஆனந்த விகடனில் வெளிவந்தமைக்கு என்னோட வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

விகடனிலேயே படித்தேன். பாராட்டுக்கள் :-)

ஜெனோவா said...

நன்றி இரசிகை , ஆமா டெஸ்டிங் முடிச்சதுல எனக்குப் புடிக்கல அதனால விட்டாச்சி ..

நன்றி பிரியா , ஆமா கிட்டத்தட்ட 18 நாள் விடுமுறை கிடைச்சதுல வீட்டுக்குப்போய் ஆட்டம் போட்டுட்டு வந்தாச்சி .. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நன்றி உழவன் !

மண்குதிரை said...

வாவ் ரொம்ப நல்லா இருக்கு

மண்குதிரை said...

வாவ் ரொம்ப நல்லா இருக்கு

ஜெனோவா said...

மிக்க நன்றி நண்பா !

sathishsangkavi.blogspot.com said...

உண்மை கவிதையாக வந்து இருக்கிறது...

ஜெனோவா said...

மிக்க நன்றி நண்பா