Monday, April 12, 2010

முகமூடியுடன் தொலைந்துபோ !

அழுதுவிடுவோம் என
பயப்படும் பொழுதுகளில்
யாரிடமும் பேசாமலிருப்பது நல்லது
முக்கியமாக நெருங்கிய நட்புகளிடம்
இதுநாள்வரையில் போர்த்தியிருந்த
கம்பீர முகமூடி கிழியக்கூடும்
நமக்கென்றிருந்த மாயபிம்பம் ஒன்று
சுக்குநூறாகும்
தனிமை அழுந்த
மதுவருந்தும் எண்ணம் மேலோங்கும்
பிறகு என்னதான் செய்யலாம்
நெரிசலான கடைவீதியில் புகுந்து
தொலையலாம்
பாலுக்காக அழும் குழந்தையிடம் சென்று
விளையாட்டுக் காட்டலாம்
அப்படி எதுவும் கிட்டாத தருணங்களில்
இப்படி வேண்டா வெறுப்பாக
எதையாவது
கிறுக்கியும் தொலைக்கலாம் !

16 comments:

இரசிகை said...

thaniyaraiyil thalaiyanai madiyil saththamittum azhalaam...

Marimuthu Murugan said...

//இப்படி வேண்டா வெறுப்பாக
எதையாவது
கிறுக்கியும் தொலைக்கலாம் !//

அட.!!!!
நல்லாருக்கு நண்பா...

நர்சிம் said...

நிறைய பேசவேண்டும் இது குறித்து பாஸ்.. வோம். அருமை.

நேசமித்ரன் said...

ஜெனோவா

முதல் நாலு வரியிலிலேயே கவிதை!

:)
நல்லா இருக்கு

"உழவன்" "Uzhavan" said...

முகமூடி இல்லாது வாழ்வது மிகக் கடினம்தான். இல்லையா? :-)
அருமையா எழுதுறீங்க நண்பா

Priya said...

//அழுதுவிடுவோம் என
பயப்படும் பொழுதுகளில்
யாரிடமும் பேசாமலிருப்பது நல்லது//.... பெரும்பாலும் நான் இதைதான் செய்கிறேன்!

//அப்படி எதுவும் கிட்டாத தருணங்களில்
இப்படி வேண்டா வெறுப்பாக
எதையாவது
கிறுக்கியும் தொலைக்கலாம் !//......... கரெக்டா சொல்லிட்டீங்க ஜோ! இப்பல்லாம் இதையேதான் நான் செய்து தொலைக்கிறேன்!


ரொம்பவும் யதார்த்த‌மான வரிகள்....உண்மையானதும் கூட!!!

ஜெனோவா said...

நன்றி இரசிகை , ஆமா அப்படியும் செய்யலாம் ..

நன்றி நண்பா

நன்றி தல , பேசுவோம் !

நன்றி நேச நேசா அண்ணா ;-)

நன்றி உழவன் சார் , உங்களுக்கு அனுப்பிச்ச குறுஞ்செய்திக்கு இன்னும் பதில காணும் .. எப்படி இருக்கீங்க ?

நன்றி ப்ரியா , 2010 கொஞ்சம் படுத்ததான் செய்யுது என்ன செய்ய ? ... உங்ககிட்ட ஒரு drawing request இருக்கு மெயில் பண்ணனும் .. வேன்..

யாநிலாவின் தந்தை said...

//இப்படி வேண்டா வெறுப்பாக
எதையாவது
கிறுக்கியும் தொலைக்கலாம் ! //

அவ்வாறு எழுதியதை படிக்கவும் செய்யலாம்....
நல்லாருக்குங்க...

Anonymous said...

Very Nice Joe....
Keep Writing more.....

ஜெனோவா said...

மிக்க நன்றி யாநிலாவின் தந்தை , தங்களின் முதல் வருகைக்கும் ;-)

ரொம்ம்ம்ப நன்றி அனானி ;-)

மங்குனி அமைச்சர் said...

பல நேரங்களில் நாம் யோசனை செய்யாமல் செய்யும் செயல் நம் முக மூடியை கிழித்து விடும் , உங்கள் முடிவு அருமை யாருக்கும் பாதிப்பும் இல்லை நாமும்தப்பலாம்

Anitha said...

hey am speechless da

ஜெனோவா said...

மிக்க நன்றி மங்குனி அமைச்சரே ;-)
மிக்க நன்றி போகி !
மிக்க நன்றி அம்மு ! ;-)

tt said...

மனுஷ்யபுத்திரன் கவிதைகள் ஞாபகம் வருது ஜெனோ.. நல்லா இருக்கு !

ஜெனோவா said...

நன்றி தமிழ் ! ;-)

chandru / RVC said...

நல்லாயிருக்குங்க!