சுள்ளி பொறுக்க போன
செல்வி அக்காவுக்கு
கருவேலங் காட்டுக்குள்ளையே பொறந்தான்
மொத பையன்.
மூக்கு சீந்திவிடக்கூட ஆளில்லாம
சீள்பட்ட செல்விக்கென்று
தெனந்தெனம் ராத்திரி மட்டுந்தான்
ஒத்த ஆளு துணையுண்டு .
துணையாம் துணை
காபிக் குடிச்சாலே சண்டைக்குப் போகும்
கசவாளிப் பய
கண்ட கருமத்த குடிச்சா என்ன செய்வாம் ?
பொறவு
ஆளு அனக்கம் இல்லாம கெடக்கும்
ரெண்டு நாளு வீடு
வழக்கம் போல யாரும் கண்டுகிடல
பக்கத்து வீட்டு பொம்பள பாத்து அலறி
ஊர கூட்டுத வரைக்கும் .
செய்தி : கணவன் தொல்லையால் விஷம் அருந்தி தாய் சேய் மரணம் .
சுவரில் ஆடும் நிழல்
4 days ago
9 comments:
கவிதை கனக்கிறது ஜெனோ
(சொல்லாடல் அருமை )
மனது வலிக்குது .
நல்ல கவிதை
வட்டார வழக்குல வலியச் சொல்லுதீய.....
சொல்லாடல் கலக்கல்..
கொடுமை
கஷ்டமான செய்திய , ரொம்ப ஈசியா சொல்லிடிக
நல்லவேள.. செய்தின்னு போட்டதால மீண்டும் ஒரு முறை படிச்சு பார்த்து புரிஞ்சுக்கிட்டேன்.
பெரிய விஷயத்தை சில வரிகள் கொண்டே அழகா கொடுத்திருக்கிங்க ஜோ!
No wordz...
- yel
நன்றி வேல்கண்ணன் !
நன்றி பத்மா !
நன்றி மாரி!
நன்றி ஆறுமுகம் முருகேசன் !
நன்றி உழவன் !
நன்றி மங்குனி அமைச்சரே !
நன்றி பிரியா !
நன்றி yel !
Post a Comment