அணிந்திருந்த
முத்துக்களைஎல்லாம் விசிறிஎறிந்து
மூளியாய் நிற்கிறாய்
போர்த்தியிருந்த
மேலாடையையாவது வைத்திருக்கலாம்
அதையும் அவிழ்த்தெறிந்து
அரை நிர்வாண அழகியாய்
சலனப் படுத்துகிறாய்
ஆரவாரம் கொள்ளக் காத்திருக்கும் தெரு
படுத்திருக்கும் மடக்குக் கட்டில்
பல்லிளிக்கும் நட்சத்திர முத்துக்கள்
அரை நிர்வாண நிலையில் நீ
ஒளி மூடிய உன் இரவு
வேறென்ன வேண்டும் நான்
மோகம் கொள்ள !
சுவரில் ஆடும் நிழல்
4 days ago
9 comments:
//ஒளி மூடிய உன் இரவு // இந்த பதம் நல்லாயிருக்குங்க... கவிதையும்!
//ஆரவாரம் கொள்ளக் காத்திருக்கும் தெரு
படுத்திருக்கும் மடக்குக் கட்டில்
பல்லிளிக்கும் நட்சத்திர முத்துக்கள்
ஒளி மூடிய உன் இரவு//
ர ச னை யா ன க வி தை ஜோ
ர சி த் தே ன் .....
ஆரவாரம் கொள்ளக் காத்திருக்கும் தெரு
படுத்திருக்கும் மடக்குக் கட்டில்
பல்லிளிக்கும் நட்சத்திர முத்துக்கள் //
ஒளி மூடிய உன் இரவு.. ரசனை.. :)
இன்றுதான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.சில கவிதைகளைத் தட்டிப் பார்த்தேன்.கை தட்டிப் பாராட்டுமளவுக்கு மனதைக் கவர்ந்தது.தொடருங்கள் ஜெனோவா !
இந்தக் கவிதையின் தலைப்பே அருமை !
ஒளி மூடிய உன் இரவு
அழகு அழகு
ஜோ, தலைப்பு சூப்பர்ப்!
முத்துக்களாய் தொடங்கி... வேறென்ன வேண்டும் நான் மோகம் கொள்ள... என முடித்திருக்கும் அழகு எனக்கு பிடிச்சிருக்கு! வாழ்த்துக்கள்!!!
போதும்போதும் இவ்வளவு போதும் :)
மிக்க நன்றி சந்துரு !
மிக்க நன்றி மாரி!
மிக்க நன்றி நேசா அண்ணா !
மிக்க நன்றி ஆறுமுகம் !
மிக்க நன்றி ஹேமா !
மிக்க நன்றி பத்மா!
மிக்க நன்றி இரசிகை !
மிக்க நன்றி பிரியா !
மிக்க நன்றி உழவன் ! ( பௌர்ணமி நிலவுக்குக் கீழே மடக்குக் கட்டிலில் படுத்துறங்கிய இளமைக் காலங்கள் நினைவுக்கு வந்ததால்தான் இப்படி ஒன்னு ;-) )
ஒளி மூடிய இரவுக்குள் உலா வரும் நிலாவுக்கு சமர்ப்பணம் இக்கவிதை .
Very good description.
-yel.
Post a Comment