பேத்திகள்
கல்கோனா முட்டாய் சாப்பிட சொன்னதற்க்காய்
சாப்பிட்டு முன்பல் உடைத்துக்கொண்டார் அப்பா .
தாத்தாவிற்கும்
தங்களைப் போல் பல் விழுந்ததில்
பேத்திகளுக்கும் சந்தோசம் .
அப்பாகூட
பல் விழுந்ததை
பெருமையாகத்தான் சொல்லிக்கொண்டார் .
எல்லா நிகழ்வுகளைப்போலவும்
வழக்கம் போல
பெரிதாய் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை அம்மா .
கம்பீரமாகவே பார்த்துப் பழகிவிட்ட அப்பாவை
இப்படி முன்பல்லில்லாமல் பார்க்க
எனக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கிறது .
செல்ஃபி
1 month ago
10 comments:
ரொம்ப இயல்பா எழுதுறிங்க ஜெனோவா...எங்கப்பா ஞாபகம் வந்துருச்சு....!!!
Nice Joe....
Ungaluku pudicha பல் ?
unmailathaan nanba
enakkum anupavam untu
nalla velippatuththiyirukkiingka
simple.. yet... beautiful...
good one jeno.. :)
@ கண்ணன் , மிக்க நன்றி கண்ணன் ! வாழ்த்துக்கள் !
@ அனானி நண்பர் , மிக்க நன்றி ! உங்கள் கேள்வி புரியவில்லை நண்பரே .
@ மண்குதிரை , ஆமாம் நண்பா , எனக்கு இந்த சின்ன விஷயத்தையே தாங்கிக்கொள்ள முடியவில்லை . ( அதான் பகிர்ந்துகொண்டேன் )
@அன்புடன் மணி , ரொம்ப நன்றி நண்பா !
வாழ்த்துக்கள்
நான்தான் உங்களை தேடி அடைய தாமத படுத்தி விட்டேன் ஜெனோவா.கவிதை வெகு இயல்பு.
வாங்க பா .ரா சார் , உங்களைப்போன்றோரின் ஊக்கங்கள்தான் தேவை , என்னைப்போன்றோர்களுக்கு .
நன்றியும் வாழ்த்துக்களும் !
”கவித.. கவித...”
என்ன ஒரு காட்சிப்படுத்தல்!!
கலக்குறீங்க போங்க.
Nanri Vinthai Manithan
அப்பாவின் பல்லோடு தொலைந்துபோய் விட்டது கல்கோனா மிட்டாய் தின்னும் குழந்தைகளும்.இல்லையா ஜெனோ?
Post a Comment