செந்திலுக்கு கிங்க்ஸ்
உதயாவுக்கு என்ன ஆனாலும் கோல்ட் பிளாக்தான்
புகையிலையை சுருட்டிவைத்து இழுப்பான் இன்னொருவன்
மரித்துப்போன சிகரெட் துண்டங்கள்
எந்நேரமும் பார்க்கலாம்
அறை முழுவதும்
சிலநேரம் வாசலுக்கு வெளியிலும் கிடக்கும் ஒன்றிரண்டு
எப்போதாவது சுவாசிக்கலாம் உயிருள்ள காற்றை
இப்படியாயிருக்கையில்
யாரேனும் என்னைக் கேட்டால்
எப்படி சொல்வது ?
புகை பிடிப்பதில்லையென!
செல்ஃபி
1 month ago
15 comments:
Nice Title...
--yel.
அழகான ஆழமான வரிகள்...
//இப்படியாயிருக்கையில்
யாரேனும் என்னைக் கேட்டால்
எப்படி சொல்வது ?
புகை பிடிப்பதில்லையென//.....
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு:-)
இப்படிச் சொல்லலாம்
இந்த பூமியை நேசிப்பதால்
புகைப்பதில்லை என்று..
:-))
ஹ்ம்ம் சரிதான்
நன்றி அனானி ,சங்கவி , பிரியா ,தமிழ் , உழவன் ,பத்மா .
அனைவருக்கும் நன்றி !
விடுபட்டு போயிருந்த மூன்று கவிதைகளையும் வாசித்து விட்டேன் ஜெனோ.
தனிப் பறவை.தனித்த வானம்.சூரியன் இறங்கும் செவ்வானம்!
பா.ரா அண்ணா , கருத்துக்கு மிக்க நன்றி! ;-)
நல்லா எழுதியிருக்கிங்க, இந்த மாதிரி பேஸிவ் ஸ்மோக்கர்ஸ் நிறைய பேர் இருக்காங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரகு!
//எப்போதாவது சுவாசிக்கலாம் உயிருள்ள காற்றை//
நல்லா இருக்கு ஜோ..
நண்பா , மிக்க நன்றி !
thalaipum nallaayirukku...
நன்றி இரசிகை ! ;-)
Post a Comment