வரம் வாங்கி
மீள்கையில்
சாபம் கொண்டு வரும்
ஒருவரையாவது
எதிரெதிரில்
சந்திக்க வேண்டியுள்ளது .
வாங்கி வந்த வரம்
சாபமென்றாக
வந்த இடத்திலேயே
சேர்த்துவிடலாமென்று
திரும்பிச் செல்கையில்
வரம் வாங்கி எதிர்வரும் ஒரு
புண்ணியாளன்
ஏளனப்பார்வை பார்த்துச் செல்கிறார்
ஒப்புக்கு சிரித்து வைப்பதை
தவிரவும்
எனக்கு வேறு வழியில்லை !
சுவரில் ஆடும் நிழல்
5 days ago
8 comments:
அருமையா இருக்கு ஜோ..
வரங்கள் எல்லாம் சாபங்களானால்
தவங்கள் எதற்காக
என்ற அப்துல்ரகுமானின் வரி நினைவுக்கு வந்தது நண்பா
நல்லா இருக்கு :)
:-)
நல்லாருக்கு ஜெனோ.
ada!
வரமும் சாபமும்.... எதிரெதிரா?!
நைஸ்!
ரொம்ப நல்ல இருக்கு தோழரே...
Nice Joe...
-yel.
மாரிமுத்து , நேசமித்திரன் ,பா.ரா ,இரசிகை ,பிரியா ,கமலேஷ் , yel , அனைவருக்கும் நன்றி நண்பர்களே !
Post a Comment