தீர்ந்த மழையில்
உடல் விறைத்து நிற்கும்
குல்முகர் பூக்களின் மரத்தினடியில்
ஒரு கோடைகாலத்தின்
வெம்மையோடு
தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன் .
தனிமைகள்
பெரும்பாலும் உஷ்ணமாயிருக்கின்றன
மரங்கள் அடர்ந்த இந்த பூங்காவிலும்
வெறுமை
ஒரு வெடித்த இலவத்தை போல
அலைந்து திரிகிறது .
காற்றில் மிதந்து வரும்
தனிமையின் இசை
ஒரு பஞ்சு மேகத்தைப்போல
எனைத் தொட்டு தடவி
பின்
வழிந்து வேறோரிடம் செல்கிறது .
அலுப்பு மேலோங்க
கண் இமைகளை
மெல்ல மூடிக்கொள்கிறேன்
இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .
கடைசியில்
காற்றோடு கதைபேசிக்கொண்டே வந்த
குல்முகர் பூவொன்று
கலைத்துச் சென்றதென் வெறுமையை
எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து
வைத்துக்கொள்கிறேன் என் குல்முகரை !
சுவரில் ஆடும் நிழல்
5 days ago
15 comments:
தனிமையை கூட இத்தனை அழகா ரசிச்சி வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா!... உங்களால் அது முடிகிறது ஜோ.
ரசித்து படித்தேன்!!!
****
மரங்கள் அடர்ந்த இந்த பூங்காவிலும்
வெறுமை
ஒரு வெடித்த இலவத்தை போல
அலைந்து திரிகிறது
இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .
எதற்கும் இருக்கட்டுமென்று எடுத்து
வைத்துக்கொள்கிறேன் என் குல்முகரை
****
nallaayirukku.....!
//காற்றோடு கதைபேசிக்கொண்டே//
பறவையே எங்கு இருக்கிறாய் பாட்டில் கதைபேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் என்று ஒரு வரி வரும்
இந்தக் கவிதையும் அந்தப் பாடலின் உணர்வைத்தருகிறது ஜெனோ
கவிதையின் பயணம் பிடித்திருக்கிறது
:)
ஜோ = ஜோ
தனிமை சிலசமயம் வரம். பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள் அந்த குல்மொஹரை .அழகு கவிதை
தனிமை ஒரு சுகம்.. அதைக் கவிதையாக்கியிருப்பது அழகு !
ரொம்ப நன்றி பிரியா , ரசிக்கனும்னு முடிவு பண்ணிட்ட அப்புறம் தனிமையாவது ... ;-) ( இப்ப கொஞ்ச நாளா ரொம்ப நேரம் தனிமையாக வாய்க்கிறது அதனால்தான் ,இருக்கவே இருக்கு பாத்து நிமிஷ நடையில lalbagh பூங்கா )
மிக்க நன்றி இரசிகை , உங்களின் !! இந்த கவிதை ரொம்ப உணர்வுப் பூர்வமானது , நல்லாயிருந்தது ! ;-)
அண்ணே , எப்படி இருக்கீங்க ? இலக்கில்லாமல் போகும் பயணத்தில் ரொம்ப சிக்கல்கள் இருப்பதாக தெரியவில்லை ;-)) நன்றிண்ணே !
நன்றி மாரி, இப்படி ஒரு கொலைவெறியா ;-)
நன்றி பத்மாக்கா, தனிமைன்னா என்னானே தெரியாமலிருந்தது கல்லூரி காலங்கள் , இப்பொழுது தனிமைதான் பிரதானமாயிருக்கிறது .. சில நேரங்களில் கொடுமையை இருந்தாலும் பல நேரங்களில் நீங்கள் சொல்வது போல வரம் தான் .. ஆம் .;-)
நன்றி தமிழ் , எப்படி இருக்கீங்க ? ஆம் சுகமாகத்தான் இருக்கிறது சில நேரங்களில் ;-)
அலுப்பு மேலோங்க
கண் இமைகளை
மெல்ல மூடிக்கொள்கிறேன்
இமைகளின் இருட்டுக் கண்ணாடியையும்
உடைத்து எட்டிப்
பார்க்கிறது தனிமை .//
மிக அழகு..
மனதை வருடும் மற்றுமொரு படைப்பு இது.
தனிமை தான் எயபொதும் நிரன்தரம் ஜொ.
--yel
நன்றி ஆறுமுகம் முருகேசன் !
நன்றி உழவன் சார் !
நன்றி yel ! ( நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும் )
கவிதையின் பயணம் பிடித்திருக்கிறது
அழகு கவிதை.
ரசிக்க வைத்தது.
மிகவும் அழகான கவிதை நண்பா...வாழ்த்துக்கள்....
நன்றி வேல்கண்ணன் , கீதா மற்றும் கமலேஷ் !
Post a Comment