Wednesday, May 19, 2010

நான் தோல்வியின் சித்திரம் !

ஒவ்வொரு முறை
வெற்றியை அணிந்துகொள்ளும்போதும்
தோல்வி
நிர்வாணப் படுத்தப்படுகிறது .

தோல்வியின்
கைவிரல்களுக்குள் சிக்காமல்
ஒரு சிறு பறவையாய்
வானேறி பறக்க தயாராகிறான்
வெற்றியாளன் .

அணிந்துகொள்ளப்பட்டு பின்
அவிழ்த்தெரியப் படும்போதுமுள்ள வலி
அதனதற்கு உண்டென்ற வகையில்
இப்போது
எனக்கும் உண்டு வலி !

9 comments:

Unknown said...

அணிந்துகொள்ளப்பட்டு பின்
அவிழ்த்தெரியப் படும்போதுமுள்ள வலி//

நான் தோல்வியின் சித்திரம் :(

rvelkannan said...

தோல்வியின்
கைவிரல்களுக்குள் சிக்காமல்
That's Nice alsor

இரசிகை said...

nallaayirukku!

Anonymous said...

Nice...

-yel

கா.பழனியப்பன் said...

நல்லா இருந்துச்சுங்க.

Marimuthu Murugan said...

தோல்வியின் வலியை
வெற்றிகரமாக உணர்த்தியிருக்கிறது
இந்தக் கவிதை...

கமலேஷ் said...

நல்ல வித்தியாசமா யோசிகிறீங்க ஜெனோ...ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்

Priya said...

வலி எல்லாம் ஒருநாள் சுகமாக மாறும் ஜோ. அதுவரை தைரியமுடன் இருங்கள்(இல்ல இப்படி அழகா எழுதிகிட்டு இருங்க:))

ஜெனோவா said...

நன்றி நண்பர்காள் !