ஐஸ்கீரீம் கேட்டு
அடம்பிடித்தழும் சிறுமியை
ஆர்வமாய் பார்க்கிறாள்
ஐஸ்கீரீம் விற்கும் சிறுமி !
-----------------------------------------
சரிதான்
இன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது
இனிவரும் நாட்களில் இவள்
தணலில் சுட்ட மக்கா சோளமோ ,
வெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்
பருவங்கள் மாறும் காலங்களில்
வியாபாரத்தை மட்டுந்தான்
மாற்றமுடிகிறது !
-----------------------------------------
இந்த பூங்காவினுள்
"பதினெட்டு வயதிற்கு கீழுள்ளோர்
அனுமதி இல்லை" என
அறிவிப்பு பலகை வைத்துவிடுங்கள்
குறைந்தபட்சம்
இவர்கள் வியாபாரிகளாகவாவது
மாறாமலிருக்கக்கூடும்!
17 comments:
அட்டகாசம் ஜெனோவா...
ஆர்வமாய் பார்க்கிறாள்
ஐஸ்கீரீம் விற்கும் சிறுமி !
கண்ணில் தெரிகிறது ஏக்கம்
அருமை அருமை
ஜெனோ
கவிதைக்கான உணர்வுகள் அழகு
வெளிப்பாடு மெல்லக் கைகூடும்
நம்பிக்கை தரும் முனைப்புகள்
அருமை, ஜெனோ!
தலைப்பே தனி கவிதை!
கவன ஈர்ப்புக் கவிதைகள்.. மிக அழகு..
Very touching...
-yel.
தலைப்பை பார்த்து ஏதோ கதை எழுதி இருக்கிங்களோன்னு நினைச்சேன். அழகான தலைப்பு! வித்தியாசமாகவே இருக்கு. ஐஸ்கீரிம் சிறுமியின் ஏக்கம் உங்க வார்த்தைகளில் தெரிகிறது.
மூன்று கவிதைகளுமே வெரி நைஸ் ஜோ.
கவிதை நான்கும் அருமை ஜோ...
(தலைப்பும் சேர்த்து நான்கு)..
மிகப்பிடித்திருந்தது தல.
சூப்பர் ஜெனோ
ப்ரிய ஜெனோவா.. பதிவைக் காண்க..
http://www.aathi-thamira.com/2010/05/blog-post_26.html
கவிதைகள் மிக அருமை நண்பரே...
:-)
Jus happened 2 c urs.. Awesome is the word... Jus wondering how i missed so long...L:) Kudos dude
சிறுமிகள் பதிந்துபோனார்கள் ஜெனோ ..
தலைப்பே கவிதை. கவிதை சொல்லாடல் மிக அருமை
நல்லா இருக்குங்க.
நன்றி பத்மா !
நன்றி நேசா அண்ணா ! எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணங்களும் மாறனும் .. பார்ப்போம் :)
நன்றி பா.ரா ! :)
நன்றி ஆறுமுகம் முருகேசன் , உங்கள் உயிரோசை கவிதை அருமை தல !
நன்றி நண்பா !
நன்றி பிரியா !
நன்றி மாரி!
நன்றி தல ! :)
நன்றி உழவன் சார் !
நன்றி ஆதி அண்ணாச்சி! :)
நன்றி அகல்விளக்கு !
நன்றி ரமணன் !
நன்றி வேல்கண்ணன் !
நன்றி செல்வராஜ் ஜெகதீசன் !
superb.......:)
நன்றி இரசிகை ! :)
Post a Comment