Sunday, May 2, 2010

அடிமைகளின் முகங்கள்!

பரபரப்பாய் இயங்கும் நகரவீதியின்
ஏதாவது ஒரு சந்தில்
ஒரு கும்பல் எப்பொழுதும்
பஞ்சாயத்து செய்து
பிழைக்கிறது

செய்யாதவற்றையெல்லாம்
செய்ததாக ஒப்புக்கொண்டு
அடிவாங்கும்
ஒர் அப்பாவியும் எப்படியாவது
கண்ணில் படுகிறான்

இணையுடன்
குறைந்தபட்ச வாக்குவாதங்களில்லாமல்
பொருட்கள் வாங்கும் சூத்திரம்
மறந்துபோய் மறைவாக
புகைத்துக்கொண்டிருக்கிறான் கணவனொருவன்

உணர்வுகள் எளிதில்
தெரியாவண்ணம்
எல்லாருக்கும் ஒவ்வொரு
நிழல் முகம் தேவையாயிருக்கிறது
சில சமயங்களில் நிழலும் கூட
முகம் சிதைந்து
முண்டங்கள் மட்டுமே நிற்கின்றன.

9 comments:

இரசிகை said...

:(

nallave solliyirukkeenga.

நேசமித்ரன் said...

//இணையுடன்
குறைந்தபட்ச வாக்குவாதங்களில்லாமல்
பொருட்கள் வாங்கும் சூத்திரம்
மறந்துபோய் மறைவாக
புகைத்துக்கொண்டிருக்கிறான் கணவனொருவன்//

:)

வெறும் காலுடன் வான் தொடும் சர்ச்சுகளின் கல்தரையில் நடப்பதும் ஒரு சுகம்தான் இல்லையா ஜெனோ ?!

"உழவன்" "Uzhavan" said...

ஜெனோ.. கலக்குறீங்க போங்க :-)

Priya said...

நல்லா இருக்கு ஜோ!

பத்மா said...

சில சமயங்களில் நிழலும் கூட
முகம் சிதைந்து
முண்டங்கள் மட்டுமே நிற்கின்றன.

எவ்ளோ உண்மை .நாம் இரட்டை முகத்தோடோ இல்லை முண்டமாகவோ தான் பல சமயம் அலைந்து கொண்டிருக்கிறோம்

ஜெனோவா said...

நன்றி இரசிகை !
நன்றி நேசா அண்ணா ! ஆமாம்னே , கல்தரையோ , மண்தரையோ சுகமாய் இருப்பது போல் பாவித்துக்கொண்டிருக்கிறேன் ...
நன்றி உழவன் !
நன்றி பிரியா !
நன்றி பத்மா ! ஆமாங்க காலம் ஒரு முகமூடி விற்பவனிடம் கடன் பட்டிருக்கிறது போலும் ..

Anonymous said...

Nice Joe.


--yel.

ஜெனோவா said...

Thanks Yel! ;-)

Unknown said...

உணர்வுகள் எளிதில்
தெரியாவண்ணம்
எல்லாருக்கும் ஒவ்வொரு
நிழல் முகம் தேவையாயிருக்கிறது
சில சமயங்களில் நிழலும் கூட
முகம் சிதைந்து
முண்டங்கள் மட்டுமே நிற்கின்றன. //

எப்பபா...