மழைத்துணி துடைத்தெடுத்திருந்த
கண்ணாடி தார்ச்சாலை
வெளிச்சங்களாய் நின்றிருந்த
உலோக மரங்கள்
நடுநிசியாதலால்
நாய்கள் கூடும் ரோடுகள்
முன்பக்கம் முழுவதுமாய் சப்பிய பைக்
மண்டை உடைந்தொளுகிய ரத்தம்
வேட்டைக்குத் தப்பிய மானொன்றைப்போல
நாலுகால் பாய்ச்சலில் வாகன விலங்குகள்
சரேலென்று கடந்து சென்றது
ஒரு கால் சென்டர் குவாலிஸ்
அதைதொடர்வதாய் ஒரு லாரியும்
பின்
ஒரு சுமோ என
வரிசையாய் ஒவ்வொன்றாய் வரத்தொடங்கின
கடைசியில் வந்தான் ஒரு சைக்கிள் காரன்
பார்த்து
படபடத்து அலறி
கூட்டம் கூடுவதற்குள்
அநேகமாய் செத்து போயிருந்தேன் நான் .
செல்ஃபி
1 month ago
3 comments:
Excellent!!! overwhelming!!!
Come on Joe!!! amazing da Nanba
ungaloda neraiya kavithai nalla irukkunga!
நன்றி மோகன் ( கொஞ்சம் லேட் ஆயிருச்சோ ;-)) )
நன்றி வழிப்போக்கன் , தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்க .
வாழ்த்துக்கள்
Post a Comment