Friday, December 4, 2009

சௌகரியங்கள் !



இருக்கும் வீட்டை மாற்றி

வேறுவீடு பார்க்கலாமென

முடிவெடுத்தாகிவிட்டது .



அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

முன்புபோல் இப்பொழுதெல்லாம் முடிவதில்லை

தரைத்தள வீடு அவசியம்.



பள்ளிக்கூடம் பக்கத்திலிருந்தால்

பையனைக் கூட்டிப்போக வர

இலகுவாக இருக்கும்.



அடுக்குமாடி

குடியிருப்புகளில் எனக்கு

அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை .



புதுஇடத்தில் நல்ல

வேலைக்காரி அமைந்துவிட்டால்

மனைவியோடு மல்லுக்கட்டல் இருக்காது .



பூங்கா ஒன்றும் அருகிருந்தால்

அப்பாவின்

சாயங்காலங்கள் இனிமைப்படும் .



எல்லாம் ஒருவழியாய்

அமைந்துவிடலாம் ஆனால் என்ன

அம்மாவுக்குதான்

சௌகரியப்படாமல் போகக்கூடும் புதுவீடு ,

என்ன செய்ய ?

இப்போதெல்லாம்

இந்தியக் கழிவறைகள் கொண்ட

வீடுகள் கிடைப்பதுதான்

அபூர்வமாயிருக்கிறது இந்நகரத்தில் !.


(உரையாடல் அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )

40 comments:

Marimuthu Murugan said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா...வெற்றி பெற வாழ்த்துகிறேன்.....
[பிரயாசை.. ன்னு தலைப்பை பார்த்தேனே.....]

creativemani said...

நல்லா இருக்கு ஜெனோவா... வாழ்த்துக்கள்..

Anonymous said...

Hmmm...Good....
Start searching now itself....
Will pray for the competition...

ஜெனோவா said...

நன்றி முத்து, ஆமா முதல்ல அப்படித்தான் வச்சிருந்தேன் , அப்புறமா மாத்திட்டேன் ;-)
உன்னோட கவிதைக்காக வெய்டிங் , சீக்கிரமா அனுப்பு ;-)

நன்றி மணி நண்பா !

நன்றி அனானி !

Priya said...

அனைத்து செளகரியங்களோடு வீடு கிடைக்க வாழ்த்துக்கள்!
(கவிதை போட்டிகளில் எல்லாம் கலந்துப்பீங்களா...அவ்வளவு பெரியயய ஆளா நீங்க)

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு ஜெனோவா


வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு ஜெனோ.வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கா!

தமிழ் உதயம் said...

இது இருந்தா அது இல்ல, அது இருந்தா இது இல்ல என்ற பழைய பாடல் உங்கள் கவிதையை வாசித்ததும் ஞாபகம் வந்தது.

tt said...

உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் இப்பொழுது தான் படித்து முடித்திருக்கிறேன்...அனுபவங்களையும், மன அதிர்வுகளையும் எந்த வித மிகைப்படுத்தலுமின்றி கவிதைகளாக்கியிருக்கும் விதம் பாராட்டத் தக்கது.. வாழ்த்துக்கள் ஜெனோவா !! (உங்கள் புனைப் பெயரா இது?)

Ganesan said...

நகரத்தின் நிதர்சனம் புரிகிறது

நந்தாகுமாரன் said...

வெற்றி பெற வாழ்த்துகள் ... ஆனால் இப்போது western toilet தான் சௌகரியமாக இருக்கிறது

கமலேஷ் said...

உங்கள் கவிதை.....
மிகவும் அருமை......
வெற்றிபெற வாழ்த்துக்கள்..

இளவட்டம் said...

நல்ல இருக்கு.ஆனா ஏதோ ஒன்று மிஸ் ஆன மாதிரி இருக்கு ஜெனோ. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

தமிழ் said...

வாழ்த்துகள்

ஜெனோவா said...

@ பிரியா , ரொம்ப நன்றி !
(ம்ம்க்கும்... கொஞ்சம் அவசரப்பட்டுடோமோ னு, நானே பயந்து போய் கிடக்கேன் , நீங்கவேற எண்ணைய ஊத்துறீங்களா? நல்லா இருங்க அவ்வ்வ்வ் ;-) )

@நன்றி நேசா!

@ பா.ராண்னே (இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ;-)) ) நன்றி மக்கா!

@ நன்றி தமிழுதயம்!

@நன்றி தமிழ் ! , (எம்பேர நிறைய பேர் எடுத்துக்கிட்டதனால , நா அம்மா பேர எடுத்துக்கிட்டேன் ;-) , இது அம்மா பேர் , இப்ப எனக்கும் )

@ நன்றி காவேரியண்ணே!

@நன்றி நந்தா !

@ நன்றி கமலேஷ் !

@நன்றி இளா, ( வீடுதாங்க மிஸ் ஆயிருச்சி ;-) )

@நன்றி நவாஸ் !

@நன்றி திகழ் !

angel said...

நல்லா இருக்கு .வெற்றி பெற வாழ்த்து(க்)கள்.....

ஜெனோவா said...

நன்றி angelintotheheaven (சொர்க்கத்திற்குள் தேவதை !! ?) நண்பரே!

thiyaa said...

அருமை

ஜெனோவா said...

நன்றி தியாவின் பேனா !

Vidhoosh said...

ஹும்ம் என்று ஒரு பெருமூச்சை வரவழைச்சது பாருங்க. அதில் ஏற்கனவே ஒரு ஜெயிப்பு இந்தக் கவிதை. :)

-வித்யா

Vidhoosh said...

அதானே!!

நல்லாருக்குங்க கவிதை.

-வித்யா

ஜெனோவா said...

வித்யா ,உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க !

இரசிகை said...

nice..!

ஜெனோவா said...

நன்றி இரசிகை!

Thenammai Lakshmanan said...

ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் கணவரின் அலுவகத்துக்கு அருகிலோ பிள்ளைகளின் பள்ளிக்கு அருகிலோ கிடைக்காதாவென எதிர்பார்ப்பது என் வழக்கம்

நல்ல பதிவு

நன்றி நண்பரே

வெற்றி பெற வாழ்த்துக்கள்

சக்தி..! said...

நல்லா இருக்கு..! நண்பரே...!

அவனி அரவிந்தன் said...

மிக எளிமையாக தோரணங்கள் கட்டாமலும் அழகாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

ஜெனோவா said...

Thanks Thenammai
Thanks Sakthi
Thanks Aravindan

Anitha said...

vazhkaiyila ovarutharoda ethiparrpum eppadi erukumnu romba azhga sollieruka da

ஜெனோவா said...

நன்றி அம்மு !
நன்றி தியாவின் பேனா !

Senthilkumar said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

பா.ராஜாராம் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ஜெனோ! :-)

ஜெனோவா said...

நன்றி உழவன் சார் ! :)
நன்றி பா.ரா :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ஜெனோவா!

-ப்ரியமுடன்
சேரல்

அன்பேசிவம் said...

வாழ்த்துக்கள் நண்பா!

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துகள் ஜெனோ

கவிநா... said...

வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

சுந்தர்ஜி said...

திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கையில் அம்மாவின் இடம் பற்றி சொல்லாமல் சொல்கிற இக்கவிதையின் இடைவெளிகள் அபாரம் ஜெனோ.