Thursday, March 18, 2010

ஒரு தலையாய்....

பாதி ராத்திரியில்
பாம்புகள் நெளியும்
கனவுகளாலேயே
விழிக்க வேண்டியுள்ளது.

உறங்கச் செல்லுமுன்
ஒன்றிரண்டு
குறுஞ்செய்திகளை
அனுப்பிவை.

மேற்கொண்டு
பாம்புகளையெல்லாம்
பட்டாம்பூச்சியாக்குவதை
நான்
பார்த்துக்கொள்கிறேன்.


************************

ஒரு
சிறு கல்லை
கையிலெடுத்துக் கொண்டு
முறைக்கிறான்
பக்கத்துவீட்டுச் சிறுவன்.
சொல்
வேறு எங்கெல்லாம்
உனக்கு ஆட்கள் இருக்கிறார்கள் ?
நான்
நாலு இடம் போறவன்.


************************


எதையாவது
பராக்குப் பார்ப்பதை
போலாவது
என்னையும்
பார்த்துவிட்டுப் போ!


************************

11 comments:

இரசிகை said...

:)

nallaayirukku........

tt said...

:-)

creativemani said...

Really Good Ones...! :)

Anonymous said...

Nice Joe....

-yel.

ஜெனோவா said...

Thanks Rasikai!
Thanks Tamil!
Thanks Mani! ;-)
Thanks Anony!

Marimuthu Murugan said...

கலக்கல் ...ஜோ...
அனைத்தும் பிடித்தது...

வேறு எங்கெல்லாம்
உனக்கு 'ஆட்கள்' இருக்கிறார்கள் ?

Priya said...

பாம்புகளைக்கூட பட்டாம்பூச்சிகளாக்கு அந்த குறுஞ்செய்தி.... சக்தி வாய்ந்ததுதான்!

//எதையாவது
பராக்குப் பார்ப்பதை
போலாவது
என்னையும்
பார்த்துவிட்டுப் போ!//......சோ ஷார்ட் & ஸ்வீட்!

பத்மா said...

ஜெனோவா இத்தனை அழகாய் கவிதை எழுதினால் பார்க்காமலா போவார்கள் .கொஞ்சம் பொறுங்கள் .உங்கள் வீட்டு வாசலில் கூட்டம் நெரியப் போகிறது போகும் போது பராக்கு பார்ப்பது போலாவது என்னை பாரேண்டான்னு

பத்மா said...

i could not post comment on ur previous post.athu supera irunthathu .keep it up jenova

ஜெனோவா said...

மாரி, நன்றி நண்பா!
//வேறு எங்கெல்லாம்
உனக்கு 'ஆட்கள்' இருக்கிறார்கள் ?//

கொஞ்சம் மாத்தி படிச்சேன், அய்யோ அர்த்தமே மாறுது, வேண்டாம் ;-)


பிரியா, நன்றி தோழி!!

//பாம்புகளைக்கூட பட்டாம்பூச்சிகளாக்கு அந்த குறுஞ்செய்தி.... சக்தி வாய்ந்ததுதான்// ம்ம்க்கும் ;-)


பத்மா மேடம்,
நம்பள இன்னுமா இந்த ஊரு நம்பிகிட்டு இருக்கு ;-))
தொடர்ந்து எழுதுவோம், தொடர்வோம், நன்றி பத்மாக்கா!!

Unknown said...

சூப்பர்..சூப்பர்.............. :)