Friday, March 19, 2010

எல்லோருக்குமான ....

எல்லோருக்கும் பொதுவான நதி
ஓடிக்கொண்டே இருக்கிறது
எல்லோருக்கும் பொதுவென்று
எண்ணமுடியாதபடி
குளித்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி
படித்துறையில் கொஞ்சநேரம்
அலைந்துகொண்டிருந்துவிட்டு
அசைந்து அசைந்து
ஆழம் செல்கிறாள்
கூழாங்கற்களோடு குறுகுறுக்கிறாள்
பாறைகளோடு வன்புணர்வு கொள்கிறாள்
திரும்பவும் கரை திரும்புகிறாள்
எல்லோருக்கும் பொதுவென்று
சொல்லிவிடமுடியாது அவளை...
சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டு
முங்கி எழுகிறார்கள்
சிலர்
செம்புக்குடம் நிரப்பிச் செல்கிறார்கள்
சிலர் மட்டுமே
அள்ளியெடுத்து பருகிச் செல்கிறார்கள்
எல்லோருக்கும் பொதுவான நதியொருத்தி
ஓடிக்கொண்டே இருக்கிறாள் !

10 comments:

இரசிகை said...

3 thadave vaasithen.....jeno thambi.

m...
avalum nathi thaane?
ilaina yennannu solleedunga:)

anbin vaazhthukal...!

"உழவன்" "Uzhavan" said...

கவிதைகளுக்கான வார்த்தை அமைப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துகள்!

Priya said...

ஜோ, இரசிகை எழுதியதை போல் நானும் திரும்ப திரும்ப படித்தேன்!

//கூழாங்கற்களோடு குறுகுறுக்கிறாள்
பாறைகளோடு வன்புணர்வு கொள்கிறாள்
திரும்பவும் கரை திரும்புகிறாள்
எல்லோருக்கும் பொதுவென்று
சொல்லிவிடமுடியாது அவளை...//......அழ‌கான‌ வார்த்தைக‌ள்! அருமையாக‌ இருக்கு ஜோ!

rvelkannan said...

//எல்லோருக்கும் பொதுவான நதியொருத்தி
ஓடிக்கொண்டே இருக்கிறாள் ! //
...ம். மிக சிறப்பான கவிதைகள் நண்பா,

tt said...

//எல்லோருக்கும் பொதுவான நதி
ஓடிக்கொண்டே இருக்கிறது//

//எல்லோருக்கும் பொதுவான நதியொருத்தி
ஓடிக்கொண்டே இருக்கிறாள் !//

எல்லோருக்கும் பொதுவான என்று எதை/யாரை சொல்லறீங்க?..நதி அல்லது பெண்??

ம்ஹும்... முழுதாக விளங்கிக் கொள்ள முடியல ஜெனோ..

Anonymous said...

Nice Joe...


--yel.

விநாயக முருகன் said...

//எல்லோருக்கும் பொதுவான நதியொருத்தி
ஓடிக்கொண்டே இருக்கிறாள் ! //
அருமையாக‌ நண்பா,

ஜெனோவா said...

நன்றி , இரசிகை , உழவன், பிரியா , வேல்கண்ணன் ,தமிழ் , அனானி , விநாயகமுருகன்.

Marimuthu Murugan said...

எல்லோருக்கும் பொதுவான நதி - சரி

எல்லோருக்கும் பொதுவென்று எண்ணமுடியாதபடி ஒருத்தி - சரி

எல்லோருக்கும் பொதுவான நதியொருத்தி ???????..
...
...
தெரிஞ்சது அம்புட்டுதான்....
..
..
.
எஸ்கேப்

மங்குனி அமைச்சர் said...

நல்லாருக்கு