எச்சிலூற நா தொங்கவிட்டு
சிங்கநடை நடப்பது போல
பாவலாக்காட்டி
ஓடியும் ,
நின்று
சதிசெய்து பின்
மெல்ல பூனை நடை
நடந்தும் ,
திட்டமிட்ட
ஒரு நரியைப்போல
மாறுவேடமிட்டு
பதுங்கியும் ,
எல்லாம் விடுத்து நாயாகவே ஆனபின்பும் ,
அணிலை கோட்டைவிட்டது
கடைசிவரையில்
அணிலாக நடிக்கத் தெரியாத நாய் !
பாட்டல் ராதாக்களின் கதை
2 days ago
11 comments:
ரொம்ப நல்லாருக்கு ஜெனோ!
ஏய் ஜெனொ,
எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சுலே உன்னப் பாத்து...
பெங்களூரு எப்படி இருக்கு... ஒரு தகவல் இல்லை உன்னப்பத்தி...
கவிதையும்... நல்லாயிருக்கு...
அன்புடன்
ராகவன்
சூப்பர் :-)
அருமை ஜெனோ..
அருமை... ஆனா,இதுல IT பத்தி ஏதும் உள்குத்து இல்லையே..!!!???
:P
அருமை ஜெனோ..
நண்பர் பாலா ...
வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும்
இரண்டு மூன்று முறை படித்து பாருங்கள் தெரியும்
இது IT Dept. க்கு மட்டும் அல்ல என்பது எனது புரிதல்
yellaathaiyum vaasithen...
vaazhthukal jenova sir:)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment