Tuesday, December 1, 2009

வேடிக்கை !




நிச்சயமாய்
அறுபது வயதிற்குமேல் இருக்கும் அவருக்கு
ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு வெளியே
சாலையோரத்தில்
பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தார் .
சிவப்பு, பச்சை,நீலமென்று
வேறு வேறு நிற வடிவங்களில்
பஞ்சு பஞ்சாய் பொதிந்து
குண்டு குண்டாய் பொம்மைகள் வைத்திருந்தார் .
குழந்தைகளுக்கு வைக்கும்
கிரீடமொன்றை வைத்துக்கொண்டும்
ஜிகினா பூ சட்டை ,
சிவப்பு பச்சை சேர்ந்த நிறத்தில்
பிளாஸ்டிக் கண்ணாடி என
ஒரு குருகுறுப்போடவே சுற்றிக்கொண்டிருந்தார் .
பாவாடைச் சட்டை சிறுமிகள் அவரைத்
தொட்டு விட்டு ஓடிவந்து
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் .
பிடிக்கவருவதைப் போல பாவலாக்காட்டி
பின்னாலேயே ஓடிவந்தவர்
எதிர்ப்பக்க உணவகத்தை ஒரு
பார்வை பார்த்துவிட்டு
மீண்டு(ம்)
துரத்திச் சென்றுகொண்டிருக்கிறார் சிறுமிகளை இப்போது
!

12 comments:

Marimuthu Murugan said...

நான்தான் முதல்ல...

கவிதை நல்லா இருக்கு நண்பா..
ஓவியம் நீ வரைஞ்சதோ?.

இளவட்டம் said...

அருமை ஜெனோவா.
கடைசி நான்கு வரிகளில் கனக்க வைத்து விட்டிர்கள்.
ஆனந்த விகடனில் கவிதை வெளிவந்ததுக்கு வாழ்த்துக்கள்.

tt said...

// மீண்டு(ம்) //

மீள முடியவில்லை..

Anonymous said...

Very Nice....

வாழ்த்துக்கள் - AV kavithiku

sathishsangkavi.blogspot.com said...

//எதிர்ப்பக்க உணவகத்தை ஒரு
பார்வை பார்த்துவிட்டு
மீண்டு(ம்)
துரத்திச் சென்றுகொண்டிருக்கிறார் சிறுமிகளை இப்போது! //

ம்ம்ம்... Super......

ஜெனோவா said...

@ முத்து, மிக்க நன்றி நண்பா !
ஓவியமா ? ம்ம்க்கும் நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் , யாரவது வரைஞ்சா பக்கத்துல உக்காந்து பாப்பேன் ;-)

@இளவட்டம் , முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !
வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே !

@தமிழ் , மிக்க நன்றி !
அவர் பார்வையை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை . ;-(

@அனானி நண்பர் , மிக்க நன்றி !

@சங்கவி , ரொம்ப நன்றி !

Priya said...

ரொம்ப டச்சிங்கா இருக்கு;-(
(நான்தான் லேட்டா)

ஜெனோவா said...

ப்ரியா ரொம்ப நன்றி !
லேட்டெல்லாம் இல்ல , நீங்க வந்தா மட்டும் போதும் , வந்தா மட்டும் போதும் ;-) ( சிவாஜி பட ரஜினி ஸ்டைலில் வாசிக்கவும் )

பா.ராஜாராம் said...

ஐயோ ஜெனோ!

கலக்குறீங்களே மக்கா.ரொம்ப பிடிச்சிருக்கு.

கவிதை போட்டிக்கான கவிதைக்காக காத்துகொண்டு இருக்கிறோம்.சீக்கிரம்...

ஜெனோவா said...

அண்ணா மிக்க நன்றி !
உங்களின் புத்தகம் பற்றிய அறிவிப்பை படித்தேன் , வாழ்த்துக்கள் மக்கா!

இரசிகை said...

azhagu...!

ஜெனோவா said...

மிக்க நன்றி இரசிகை !