உங்களை கொலை செய்ய
ஒரு திட்டம் தயாராக இருந்தது
நெருங்கி பழகியாகிவிட்டது
நம்பிக்கையும் வரச்செய்தாகிவிட்டது
துரோகத்திர்க்கேற்ப
விலையும் கொண்டாகிவிட்டது
போட்ட திட்டத்தின்படியே
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த
ஓர் அந்திவேளையில்
குருதிவழிய கொலை செய்யப் படுகிறீர்கள்
தாங்கவியலா வலியின் வாய்
ஏதோ முனங்குகிறது.சில நிமிடங்கள்.
புன்னகைத்துக் கொண்டே போய்விடுகிறீர்கள் நீங்கள்
பின் நிகழவிருக்கும்
ஒரு தற்கொலைக்கான காரணத்தை மட்டும்
என்னிடம் விட்டுவிட்டு .
முதியதோர் உலகு
2 days ago
8 comments:
Very terror kavithi...
--yel.
//பின் நிகழவிருக்கும்
ஒரு தற்கொலை//
நல்ல முடிவு..
நல்ல கவிதை ஜோ..
நல்லாருக்கு ஜெனோ... இப்பெல்லாம் இப்படித்தானே (தற்)கொலைகள் நடக்கின்றன :-)
ஜெ...
இன்னும் கொஞ்சம் எதிர் பார்த்துட்டேனோ?
:)
மிக்க நன்றி அனானி நண்பர் ;-)
மிக்க நன்றி மாரி ;-)
உழவன் சார் ரொம்ப நன்றி ;-)
நேசாண்ணே, ஒவ்வொரு பருக்கையா தூக்கிட்டு வாரேன் ;-)
ஊக்கத்துக்கு நன்றிண்ணே !
//பின் நிகழவிருக்கும்
ஒரு தற்கொலைக்கான காரணத்தை மட்டும்
என்னிடம் விட்டுவிட்டு//.....
நல்லா இருக்கு இந்த வரிகள்!
mudivu nallaayirukku.....
mudivu nallaayirukku.....
Post a Comment