Tuesday, March 2, 2010

ஒரு பித்துக்குளியின் கடைசி மூன்று நாட்குறிப்புகள் !

முதல் பக்கம் :

எனக்கு
கொஞ்சநாளாய்
மனப்பித்து இருப்பதாக
உணர்கிறேன்
உங்களுக்கு புரியும்படி சொல்வதானால்
ஸ்கிசோஃப்ரினியா நோய் .

இரண்டாம் பக்கம் :

மூன்று வயதாகும்
என்
குழந்தை
பள்ளிக்குப் போகிறாள்
இன்றைக்கு அணிந்திருக்கும்
ஆடையின் நிறம் சிவப்பு
அழகாய்
சிரிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறாள் .

குழந்தை இருக்கும் வீடு
அழகானதுதான்
ஆனால்
அதை பெற்றுக்கொள்வதற்கு
மனைவியும்
ஒரு வீடும்
வேண்டும் .

மூன்றாம் மற்றும் கடைசி பக்கம் :

நீங்கள்
கட்டியிருக்கும் இந்த
கழுத்து சுருக்கு
அதாவது
டை
பளிச்சென்று இருக்கிறது .

கனத்த சுருக்குகள் போடும் விதம்
பற்றி
உங்களுக்கு
சொல்லித் தரலாமென்றால்
மேஜையில் இருந்த
மஞ்சள்நிற நைலான் கயிறை
இப்போது பார்த்துக் காணவில்லை
இருங்கள்
என் தனியறையில்
இருந்தாலும் இருக்கும்
தேடிக் கொண்டு வருகிறேன் .

5 comments:

பா.ராஜாராம் said...

ஜெனோ,

சிக்ஸ்சர்!

Anonymous said...

Nice Joe...

-yel.

ஜெனோவா said...

பா.ரா நன்றி ! ;-)
நன்றி அனானி !

இரசிகை said...

m........piththuk kulithaan...

ஜெனோவா said...

ஹ்ம்ம் .. ஆமா என்ன செய்ய இரசிகை ? ;-)

ரொம்ப நாளா ஆளக் காணோம் , எப்படி இருக்கீங்க ?

நன்றி.