வெட்டாந்தரையிலோடும்
கரும்புள்ளி வண்டிற்க்கொப்பான
மனநிலையில்
நான்.
மிக எளிதாய் கடந்துவந்ததாய்
நினைத்துக்கொண்டிருக்கும் வெறுமையின்
நாட்களை
இந்த சிற்றெரும்பை பார்க்கையில்
நினைத்துக்கொள்கிறேன் .
துர்கனவுகளுக்கு பயந்து
தூங்காமல் கிடந்த ராத்திரிகளின் வாசனை
இங்குதான் ஏதேனும் ஒரு
மரத்தினடியில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் .
மனம் தெளிந்த இக்கணத்தில் ...
பெயர்தெரியாத ஒரு செடி
துளிர்க்க ஆரம்பிக்கிறது .
தகித்து கொண்டிருந்த வெயிலை
சுகித்துப் பார்க்கிறது மழைக்கு முந்திய தென்றல் .
மஞ்சள் நிறத்தில் கடலைக்காடுகள்
பூத்த வண்ணம் இருக்கின்றன .
ஒரு சிகப்பு நிற பட்டுப்பூச்சி
என் பாதைக்கு குறுக்காய் செல்கிறது .
மழைக்கு அடிபோடுகிறது வானம்
நானும்
நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு !
முதியதோர் உலகு
1 day ago
6 comments:
மழைக்கு அடிபோடுகிறது வானம்
நானும்
நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு ....
:) Nice.
சூப்பர்.. அடிக்கடி எழுதுங்க நண்பா
நல்லா இருக்கு நண்பா
இது ஒரு சக்கரம் நண்பா, பருவங்கள் வரும் போகும், போகும் வரும், நனைவோம் :)
கவிதைவிட நீங்கள் வந்திருப்பது சுகமாக இருக்கிறது. நலமா
கவிதை பற்றி சொல்ல நாளை வருகிறேன்
இதோ வந்துட்டேன் ...
//நானும்
நனையத்தான் விரும்புகிறேன் இப்போதைக்கு //
இந்த நனைதல் உங்களுக்கு கவிதை தருகிறது என்றால்
தயவு செய்து அடிக்கடி நனைந்து கொள்ளுங்கள் நண்பா
நன்றி கீதா , உழவன் ,யாத்ரா,கண்ணன் !
Post a Comment