பறவையிடமிருந்து
பிரிந்த கதை தெரியாமல் இன்னும்
பறந்தபடியே இருக்கிறது
இந்த இறகு
தள்ளாடி ...தள்ளாடி
தரையை முட்டும் பொழுதில்
அவசரமாய் நான் செய்த
மூச்சுக்காற்றின் மீதேறி பறந்து
மறைந்த அது
உங்களிடமும் வரக்கூடும்
தயவுசெய்து
ரகசியம் காத்திருங்கள் - முடிந்தால்
ஒரு காற்றை செய்தனுப்புங்கள்
பறந்தபடியே இருக்கட்டும் இறகு !
முதியதோர் உலகு
13 hours ago
12 comments:
அருமை ஜெனோ!
பிரிந்த இறகின் பயணம் தொடரட்டும் :)
Nice one :)
//உங்களிடமும் வரக்கூடும்
தயவுசெய்து
ரகசியம் காத்திருங்கள்//... நிச்சயமா:)
ஆமாம் ஜோ, பறந்தபடியே இருக்கட்டும் இறகு!
//பறந்தபடியே இருக்கட்டும் இறகு//
எழுதியபடியே இருங்கள் ஜெனோ ரொம்பவே நல்ல இருக்கு
திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன் ஜெனோ.. என்ன சொல்றதுனே தெரியல. அற்புதம்
Wonderful da...
ரூம் போட்டு யோசிக்கிறது இது தானா?
ப்ப்ப்ரமாதம்ம்ம்ம்!!
Nice....
-yel.
காற்றை செய்தனுப்புங்கள்
அல்லது
இதை போல ஒரு அழகான கவிதையை செய்தனுப்புங்கள்
பறந்தபடியே இருக்கும்
அந்த இறகு. - சரிதானே ஜெனோ.
சரியா ஒரு மாசம் கழிச்சு பின்னூட்டம் போடுறேன்! ஏன் ஜெனோ அடிக்கடி எழுதலாமே? அவ்ளொ அடர்த்தியா இருக்கு கவிதைல்லாம்.... ரொம்பல்லாம் கேப் விடாதீங்க!
remba remba pidichurukku...
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html
Post a Comment