Sunday, November 15, 2009

சனிக்கிழமை இரவும் ஒரு மதுபான விடுதியும் .

 
 






 1.   உள்ளொன்று வைத்து 
      வெளியொன்று பேசும்விதமாய் இல்லாமல்
      வெளிப்படையாகவே
      திறந்தும் வரவேற்றும் கிடக்கின்றன
      மதுபான விடுதிகள்.

 

2.   வண்ண விளக்குகளின் உச்சத்தில் 
      மின்னும் ஆடைகளுடன்
      கண்சிமிட்டி ஆடும் நடனக்காரிகளிடம்
      கவனம் தேவை .
      சிலசமயம்
      மனசையும் ஆட்டிவிடுகிறார்கள்
      அதிலும் அந்த ஆரஞ்சுக்கலர்
      சேலைக்காரி
      கொள்ளைக்காரி .

 

3.   இடுப்பில் குழந்தையுடன்
     அவளை எங்கோ பார்த்திருப்பதாய்
      நண்பன் சொன்னதிலிருந்து
      ரசிக்கமுடியவில்லை
     அவளின் அரையும் குறையுமான
     ஆட்டத்தை .

 

4.   எதை எதையோ 
     கலந்து கொடுத்தார்களென நினைக்கிறேன்
     நல்லவேளை
     சாராய நாத்தம் அடிக்கவில்லை
     வீட்டுக்கு வந்தபோது .

 

5.   விடியும்போது வந்து உறங்கி
     முழிப்பு வரும் சமயம் 
     உணரப்படும் தலைக்குத்தலோடு
     கூடவே வந்து போகிறது
     நடனக்காரிகளின்
    முகங்களும் .



11 comments:

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு ஜெனோ!
நம்மாளா நீங்க..:-))

Anonymous said...

Nice.

ஜெனோவா said...

மிக்க நன்றி பா.ரா சார்
ஆமாண்ணே நானும் சோசலிச கட்சி உறுப்பினர்தான் ;-)))

வாழ்த்துக்கள்

ஜெனோவா said...

நன்றி அனானி நண்பரே ( உங்களை எனக்குத் தெரியுமென்றால் பெயரோடு வரலாமே , அனானி என்று எழுதும்போது சங்கடமாயிருக்கிறது ;-)) )

வாழ்த்துக்கள்

Marimuthu Murugan said...

நல்லா இருக்கு ஜோ!!! குறிப்பா 3.

ஜெனோவா said...

நன்றி மொக்க மாரி. ;-)

வாழ்த்துக்கள்

ஜெனோவா said...
This comment has been removed by the author.
vinthaimanithan said...

//சிலசமயம்
மனசையும் ஆட்டிவிடுகிறார்கள்
அதிலும் அந்த ஆரஞ்சுக்கலர்
சேலைக்காரி
கொள்ளைக்காரி .//
எங்கிருந்தோ வந்து மனசை அள்ளிப்போகும் பூவாசம்போல?!

//இடுப்பில் குழந்தையுடன்
அவளை எங்கோ பார்த்திருப்பதாய்
நண்பன் சொன்னதிலிருந்து
ரசிக்கமுடியவில்லை
அவளின் அரையும் குறையுமான
ஆட்டத்தை .//

நல்ல அவதானிப்பு!

ஜெனோவா said...

நன்றி விந்தைமனிதன் !
வாழ்த்துக்கள்

Priya said...

ம்ம்.....அனுபவமா?(ச்சும்மா கேட்டேன்)
நல்லாயிருக்கு!!!

ஜெனோவா said...

இதையெல்லாம் அனுபவித்து பார்க்கலாம்னா... எங்க விடுறாங்க நம்ம தாய் திருநாட்டில் ...
( எல்லாம் ஒரு வையித்தேரிச்ச்சல்தான் ;-) )

மிக்க நன்றி பிரியா.
வாழ்த்துக்கள்