Monday, January 18, 2010

இப்படியாய் இன்று !

தெரியாத்தனமாகப் பட்டு விட்டதென்ற
முக பாவத்தோடு அமர்ந்திருந்த
பின் இருக்கைக்காரனைப் பார்த்து
ஒரு முறைப்பு மட்டும் முறைத்துவிட்டு,
பளாரென அறை
கூச்சல் போட்டு கூட்டம்
கையிலேடுத்தச் செருப்பு என
எந்த அபாயநிலை
மந்திரத்தையும் பிரயோகிக்காமல்
புத்திசாலி பெண்
கால்களை மட்டும்
முன்நகர்த்தி வைத்துக்கொண்டாள்.
வாக்குவாதம்
கைகலப்பு
காவல் நிலையம் என
வழக்கமாய் வந்துசேரும் எதுவும் வராமல்
சுவாரஸ்யமற்று
நெரிசலோடு சென்றுகொண்டிருக்கிறது இன்றைய
அலுவல் நேர காலைப் பேருந்து !

16 comments:

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு ஜெனோ

:)

கமலேஷ் said...

ரொம்ப அழகா இருக்கு...வாழ்த்துக்கள்....

"உழவன்" "Uzhavan" said...

எங்கெங்கெல்லாம் சுவராஸ்யம் இருக்கு :-)

Anonymous said...

Nice Joe...

ஜெனோவா said...

நன்றி நேசாண்ணே!
நன்றி கமலேஷ்!
ஆமாண்ணே , நன்றி ! ;-)
நன்றி அனானி !

Priya said...

//புத்திசாலி பெண்
கால்களை மட்டும்
முன்நகர்த்தி வைத்துக்கொண்டாள்.//

//சுவாரஸ்யமற்று
நேரிசலோடு சென்றுகொண்டிருக்கிறது இன்றைய
அலுவல் நேர காலைப் பேருந்து !//...

அந்த பெண் புத்திசாலிதனமா நடந்துக்கிட்டதால, உங்களுக்கு சுவாரஸியம் இல்லாம போயிடுச்சே:-)

ரொம்ப நல்லாயிருக்கு!!!

ஜெனோவா said...

ஆமா பிரியா .. சில நாட்கள் இப்படித்தான் சுவாரஸ்யமில்லாமல் மொக்கையாகப் போகும் ..
நன்றி ஓவியரே !;-)

Marimuthu Murugan said...

நண்பா...உன்னைச் சுற்றி நடப்பவைகளை நன்றாக கவனிக்கிறாய் போ...
அருமையா இருக்கு...
//நேரிசலோடு// புதுசா இருக்கே..

ஜெனோவா said...

நன்றி நண்பா ,திருத்தி விட்டேன்!

Unknown said...

ரொம்ப நல்லா இருக்குங்க....,

பா.ராஜாராம் said...

சாதாரணமான தருணங்கள்.அசாதரணமான பார்வை.

அழகு ஜெனோ!

ஜெனோவா said...

நன்றி பேனா மூடி ! ;-)

நன்றி பா.ரா , உங்களுடைய பின்னூட்டம் குளுகோஸ் குடிச்ச மாதிரி இருக்குண்ணே! ;-)

சந்தான சங்கர் said...

ஆர்பாட்டங்களை

சிந்தாத

அருமையான பயண

க(வி)தை..

இராவணன் said...

:)))

ஜெனோவா said...

நன்றி சந்தான சங்கர் !
நன்றி இராவணன் !

இரசிகை said...

kandippaa ava puththisaalip pen thaan!!