Wednesday, February 3, 2010

எங்காவது தீ எரியலாம்!

வினாடிகளுக்கும்
வினாடிக்களுக்குமேயான இடைவெளியில்
ஒவ்வொருமுறையும் அவசரமாக
ஏறிப் பறக்கின்றன குட்டிப்
போர் விமானங்கள் .
பெரிது பெரிதாக
சத்தம்கேட்கும்போதெல்லாம் சிறிதாக
ஒன்று மேலெழும்பிப் பறப்பதை
அலுவலகக் கண்ணாடிச் சன்னல் காண்பிக்கிறது .
வேலையற்ற அல்லது
செய்ய விருப்பமற்ற
சோர்வான அலுவலக மதிய வேளைகளில் சுறுசுறுப்பாய்
கிளம்பும் விமானங்களைப்
பார்க்க பார்க்க ஆச்சர்யமாக உள்ளது .
"நானும் பைலட் ஆகிப் பறப்பேன் "
அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்த குழந்தைப்
பிராயத்திலிருந்து விமானங்கள் மிகப் பிடிக்குமென்றாலும்,
எங்காவது போர் மூளலாம் என
நினைத்த கணத்திலிருந்து
இந்த ' போர் விமானங்கள்' கொஞ்சம்
பயமுறுத்தத்தான் செய்கின்றன .

7 comments:

Ganesan said...

ரொம்ப பயந்து போய் இருக்கீங்க போல.


வினாடிகளுக்கும்
வினாடிக்களுக்குமேயான இடைவெளியில்

ரசித்தேன் இவ்வரிகளை.

Anonymous said...

Nice Joe.

--yel.

Marimuthu Murugan said...

//இந்த ' போர் விமானங்கள்' கொஞ்சம்
பயமுறுத்தத்தான் செய்கின்றன //
ஆமாம் நண்பா...
(HAL பக்கத்துல அலுவலகம் இருந்தால் இப்படித்தான்..)

kavitha said...

hi........
i read your lyrics.. solrathuku varthaiye illa... eliya thamizh nadaiyila arumaiya koduthu irukkinga... ovovru kavithaiya padichi mudicha udane enaku erpatta viyappai adakka migavum siramma maaaga irunthathu... nice... keep posting... ethana jenmam eduthaalum unga alavuku ennala ezhuthave mudiyaathunga.... good work... keep it up

Priya said...

ரொம்ப பயந்துபோயிருக்கீங்க போல‌:)

சிறந்த நடையில் அழகான வரிகள்!!!

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

இரசிகை said...

m...