
அகாலத்தில்
ஒற்றையாக குரைத்துக்கொண்டிருக்கும்
தெருநாயொன்றின் மீதேறி நகர்கிறது
விழித்திருப்பவனின் இரவு .
அணைந்த விளக்கிலிருந்து
மேலெழும் கரும்புகை
முற்றுபெற்ற துரோகத்தின் நாளொன்றை
நினைவுபடுத்துகிறது .
தொடங்கப்போகும்
பழிதீர்த்தலின் நாளை
ஊதித்தள்ளும் சிகரெட்டின் வெண்புகை
தீர்மானிக்கிறது .
திட்டம்தீட்டும் இரவுகள்
நீளமானவை
முற்றும்பெறாதவை....
13 comments:
அருமை அருமை
//தொடங்கப்போகும்
பழிதீர்த்தலின் நாளை
ஊதித்தள்ளும் சிகரெட்டின் வெண்புகை
தீர்மானிக்கிறது .
//
ஹா...ஹா...ஹா super
"முற்று பெறாதவை" நிறைய யோசிக்க வேண்டி.... ?!
ஜெனோ
ம்ம் நல்லா இருக்கு ஆனா முதல் பத்தி என்னவோ எஸ்.ராவின் நாவலில் வரும் ஒரு வரி போல இருக்கிறது :)
நல்லாயிருக்குற மாதிரி இருக்குது. (புரியாததனால்) :-))
நல்லாருக்கு ஜெனோ.
நண்பா...சரி பார்ம்ல இருக்கீங்க...அருமையா வந்திருக்கு...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
அருமை
அன்பின் ஜோ , கவிதைகள் மிகச்சிறப்பாக உள்ளன, உள்ளவை யாவும் அகவெளியின் இருளை மட்டும் பிரதிபலிக்கின்றன. இதுவும் கடந்துபோம்.. காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே. எது எப்படிஎன்றாலும் நீ இன்னும் உயரங்களுக்குச் செல்வாய். இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கும் நண்பன்
ராஜேஷ்
நன்றி வேலு !
நன்றி ஆறுமுகம் !
நன்றி நேசா அண்ணா! ஒருவேளை தாக்கமாக இருக்கலாம் , ஆனால் இரவு இரண்டு மணிக்கு நாய் குரைத்தபோது எதார்த்தமாக எழுதியது , மன்னிக்கவும் ! :)
நன்றி ஆதி சார் !
நன்றி பா. ரா டியர் :)
நன்றி நண்பா ! (இப்போதான பொழுதுகள் இவ்வாறாகத்தான் :( )
நன்றி மங்குனி அமைச்சரே !
நன்றி ராஜேஷ் , விரைவில் பேசவேண்டும் உன்னிடம் .
ரசித்தேன் ஜெனோவா
-ப்ரியமுடன்
சேரல்
நன்று ஜோ...
கவிதை மொழி இயல்பாவும் ரசிக்கும்படியும் இருக்கு ஜெனோ.நானும் திருநெல்வேலி சரக்குதான் என் பள்ளி-கல்லூரிக் காலங்களில்.தாமிரவருணியின் வர்ணம்தான் என் மொழியும் கூட.அடிக்கடி சந்திப்போம்.வாழ்த்துக்கள் ஜெனோ.
kavidha kavidha !!! ka ka po
Post a Comment