
உறக்கம் வராத
இராத்திரிகளில்
நட்சத்திரங்கள் ரசிப்பது
என் வழக்கம்
கொட்ட கொட்ட விழித்திருக்கும்
வெள்ளிகளுக்கு நடுவே
ஒரு வெள்ளி உருவி ஓடுகிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உருவியோடும் வெள்ளிகளை
பார்த்துக்கொண்டிருப்பதால்
மறதி வாய்க்குமென்பதில்
இனி நம்பிக்கையில்லை
வெள்ளியொன்று உருவிச் செல்கிறது
பறவையொன்றும் படபடத்து பறக்கிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சட்டென உன்நியாபகமும் வருகிறது !
12 comments:
சிறப்பான கவிதை ஜெனோ. எனக்கு மிகவும் பிடித்துபோனது.
தேர்ந்த படத்தை தேர்வு செய்வதற்கு உங்களுக்கு தனிப்பட்ட வாழ்த்துகள்
கவிதை அருமை!
தலைப்பு பேசுது நண்பா
கேட்டுட்டு இருக்குறேன்
:)
மறதி வாய்க்குமென்பதில்
இனி நம்பிக்கையில்லை ...
சட்டென உன்நியாபகமும் வருகிறது ..
கலக்கல் ஜோ...
நல்லாருக்கு ஜெனோ டியர்.
ம்ம்..அழகா இருக்கு
தலைப்பு மிகப் பிரமாதம்.
வெள்ளிய உருவிய தடம்..
அருமையான வரிகள் நண்பரே..
கவிதையை படித்து விட்டு வானம் பார்க்க தோன்றுகிறது.
ரொம்ப நல்ல இருக்கு நண்பரே..
Congrats...
Good one...
-yel
நல்ல ரசனையான காட்சி. எனக்குப்பிடித்திருந்தது. (அது ஞாபகம் என்றிருந்தால் நன்றாகயிருக்குமோ?)
பியூட்டிஃபுல் ஜோ!
அழகான கவிதை... பொருத்தமான தலைப்பு... அதற்கேற்ற படம் என்று மிகவும் அருமையாக இருக்கு.
atha paakum poadhu why my gnabagam
wonderful jeno!
Post a Comment