Friday, July 2, 2010

சிலந்தி வரைந்த சித்திரம் !

ஒட்டடை அடர்ந்திருந்த வளவுக்குள் இருந்த
தாத்தா காலத்து கற்தூண்களுக்கிடையே அந்தரத்தில்
வெகுநாட்களாய் தொங்கியபடி இருந்தது
சிலந்தி வரைந்த சித்திரம்
சித்திரத்தின் ஆதாரமுனைகள்
திடமற்றதென்பது அறிந்ததுதான்
ஏற்கனவே தெரிந்திருந்தாலும்
இழப்பு என்பது இழப்புதானே ?
சித்திரம் சிதிலமடைய ,
சிலந்தி
ஓடத் தொடங்கியது
எங்கோ சென்று ,எதையோ பற்றிக்கொண்டு
புதிதாய் ஒன்றை சார்ந்துகொண்டு
வாழ்ந்துதானே ஆகும் ? ஆனால்
விரட்டப்பட்ட
இதே இடத்திற்கே திரும்பவும்
வருமென்பது சந்தேகம்தான் .

8 comments:

Anonymous said...

Nice...

-yel.

Unknown said...

ம் !!

rvelkannan said...

அருமை ஜெனோ .
கடைசி இரண்டு வரியில் கவிதை வேறு அர்த்தம் சொல்கிறது.
சிலந்திக்கே இந்த கதி என்றால் ..... ?

Priya said...

ம்ம்... ஆமா ஜோ, சந்தேகம்தான்!

Anitha said...

wonderful da

கமலேஷ் said...

கவிதை ரொம்ப தெளிவா இருக்கு நண்பா...
எதை மனசுல வச்சி எழுதி இருக்கீங்கன்னு புரியுது...
நல்லா வந்திருக்கு வாழ்த்துக்கள்...

Thamira said...

ஆழமான கவிதை.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு ஜெனோ!