செல்வி உன்ன கருவாயனு சொல்லிட்டாடா
செம சண்ட
நல்லா திட்டிட்டு வந்திட்டேன்
நீ கலரா இல்லானாலும் களையா இருக்கடா
இதே எனக்கு போதும்
உனக்கு என்ன புடிச்சிருக்காடா ? நான் அழகா இருக்கேனா?
கல்யாணம் பண்ணிக்கலாம்டா
நா வேலைக்கெல்லாம் போகமாட்டேன்
எங்க அப்பாகிட்ட போய் பேசுறியா ? ஆனா நான் வரமாட்டேன் .. சரியா ?
ஏஏய்.. என்ன எல்லாத்துக்கும் ஒரு இளிப்புதானாடா ?
எல்லாத்துக்கும் சிரிப்புதான் ... சிரிப்பாய்தான் இருந்தது !
அவன் என்ன மறக்க ரொம்ப கஷ்டபடராண்ணா...
என்ன கருமத்துக்காம் ??
இது காதல் ணா.. காதல் ...
இதுக்கும் சிரிப்புதான் ... சிரிப்பாய்தான் இருக்கிறது !
அப்போது பதில் சொல்ல பிடிக்காது
இப்போ பதில் சொல்ல முடியாது .
முதியதோர் உலகு
1 day ago
5 comments:
//அப்போது பதில் சொல்ல பிடிக்காது
இப்போ பதில் சொல்ல முடியாது //
ஒரே காதல் இருவேறு நிலை!
அருமை நண்பா!
காலை பொழுதில் நெகிழ வைத்த கவிதை இது ஜெனோ, எளிமையான இயல்பான வார்த்தைகளில் இருவேறு காலத்திற்கும் இடையேயான நிகழ்வுகளை இந்த கவிதையில் சொல்லியிருப்பது, மிளிர்கிறது ஜெனோ, வாழ்த்துகள்
ரொம்ப அருமையா இருக்கு...
ரொம்ப பிடிச்சிருக்கு..
அருமையா இருக்கு ஜோ.
//அப்போது பதில் சொல்ல பிடிக்காது
இப்போ பதில் சொல்ல முடியாது// இந்த வரிகள் எனக்கு பிடிச்சிருக்கு.
Nice Joe...
-YEL.
Post a Comment