Wednesday, November 4, 2009

பிடித்தும் பிடிக்காதவை ( தொடர் பதிவு )

தோழர் மாதவராஜ் அவர்கள் ஆரம்பித்து வைத்ததிலிருந்தே ஒவ்வொரு பதிவாக சென்று , பிடித்த , பிடிக்காதவைகளைஎல்லாம் விடாமல் படித்துக்கொண்டிருந்தேன் . நண்பர் நர்சிம் எழுதியிருந்த பதிவையும் படித்துக்கொண்டே வந்தால் , இறுதியில் இருந்தது அதிர்ச்சி - அட !நம்பளையும் அழைத்திருந்தார் . பிடித்தது ,பிடிக்காதது எல்லாவற்றையும் கிறுக்கி வைத்திருக்கிறேன் , பிழையிருந்தால் சுட்டுங்கள் தோழ்ர்களே !

ஆரம்பித்த தோழர் மாதவர்ஜுக்கும் , அழைத்த நண்பர் நர்சிம் அவர்களுக்கும் நன்றிகள் பல ...

இந்தப் பதிவோட விதிகள்:(பரிசல் குரலில்) >> இது கட் காபி பேஸ்ட்

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.


என்
பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)

********************

இனிமே தான் நான் ,



1.அரசியல் தலைவர் :
பிடித்தவர் : யாரையும் குறிப்பிடும் அளவுக்கு இன்னும் வளரவில்லை . ;-)

பிடிக்காதவர்: மு.க கூட்டம்


2.எழுத்தாளர்
பிடித்தவர் : இப்போதைக்கு வண்ண நிலவன் .
பிடிக்காதவர் : ஜெயமோகன்

3.கவிஞர்
பிடித்தவர்: நா .முத்துக்குமார்
பிடிக்காதவர் : பா. விஜய்

4.இயக்குனர்
பிடித்தவர்: யதார்த்தமாய் இயக்கும் எல்லோரும் .
பிடிக்காதவர் : பேரரசு

5.நடிகர்
பிடித்தவர்: மாதவன் (அன்பே சிவம் , தம்பி , எவனோ ஒருவன் ,நளதமயந்தி)
பிடிக்காதவர் : விஷால்

6.நடிகை
பிடித்தவர் : ஷாலினி
பிடிக்காதவர் : ஸ்ரேயா ( நடிப்புல மட்டும்தான் ஹி ஹி )

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : சமீபமாய் ஹாரிஸ்
பிடிக்காதவர் : குறிப்பிட இயலவில்லை ( எல்லோருடைய இசையிலும் எதோ ஒன்று பிடித்துபோய் விடுகிறது )

8. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி மசாலா குழுமம் .

பிடிக்காதவர் : மத்தவங்க படத்தையெல்லாம் புடுங்கி திரையிடுற ரெண்டு பேரக் கண்டாலே ஆகாது .

9.பிடித்த ஒளிப்பதிவாளர் :இதில் பிடித்த ஒளிப்பதிவாளர்களை மட்டும் சொல்வதாய் எண்ணம்

பி . சி . ஸ்ரீராம்
சந்தோஷ் சிவன்
கே . வி . ஆனந்த்
சதீஷ் குமார் ( பேராண்மை )

10.விளையாட்டு
பிடித்தது : கால்பந்து

பிடிக்காதது : சிறுவயதில் எப்போதுமே தோற்றுக்கொண்டிருந்த கோலிக்குண்டு ;-))

தொடர அழைப்பது :
மண்குதிரை
பிரியமுடன் வசந்த்
சேரல்





8 comments:

Ganesan said...

நன்றி ஜெனோவா ,

த‌ங்க‌ளின் பிடித்த ஒளிப‌திவாளர்க‌ளின் வ‌ரிசையில் பேராண்மை ச‌திஷ்குமார் இட‌ம் பெற்றுள்ளார்.எனது நெருங்கிய‌ உற‌வின‌ரும் கூட‌. அவ‌ருக்கு தெரியப்படுத்துக்கிறேன்.


அன்புடன்,
காவேரி கணேஷ்

creativemani said...

கலக்கிட்டீங்க ஜெனோவா!!! :)
//
மத்தவங்க படத்தையெல்லாம் புடுங்கி திரையிடுற ரெண்டு பேரக் கண்டாலே ஆகாது//
எனக்குத் தெரிந்த வரை தயாரிப்பாளர்களே நல்ல லாபத்துக்காகவும் விளம்பரத்துக்காகவும் வலிய சென்று விற்பதாக தெரிகிறது..

ஜெனோவா said...

காவேரி கணேஷ் , நீங்கள் அவரின் உறவினர் என்று தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா !

தொடர்ந்து அவர் துறையில் சாதிப்பதற்கு என் வாழ்த்துக்களும் ;-)
வருகைக்கு நன்றி !

ஜெனோவா said...

வாங்க அன்புடன் மணி ,
வலிய சென்று விக்கிறார்கள் என்பது புது செய்தி , அப்படியே விற்றாலும் நல்ல விலைக்கு வாங்குவார்களா என்ன ??

புதுசா விமான சேவையும் வருகிறதாம் , பொறுத்திருந்து பார்ப்போம் .

வாழ்த்துக்கள் !

நர்சிம் said...

மிக நல்ல லிஸ்ட் பாஸ்

//KaveriGanesh said...
நன்றி ஜெனோவா ,

த‌ங்க‌ளின் பிடித்த ஒளிப‌திவாளர்க‌ளின் வ‌ரிசையில் பேராண்மை ச‌திஷ்குமார் இட‌ம் பெற்றுள்ளார்.எனது நெருங்கிய‌ உற‌வின‌ரும் கூட‌. அவ‌ருக்கு தெரியப்படுத்துக்கிறேன்.
//

சூப்பர் காவேரி

ஜெனோவா said...

நன்றிண்ணே !! ;-)

மண்குதிரை said...

azhaippukku nanri nanba

muyarsikkiren

ஜெனோவா said...

அவசரமே இல்லை நண்பா , நேரம் கிடைக்கும்பொழுது பகிர்ந்து கொள்ளுங்கள் !!

நன்றி !