Tuesday, November 10, 2009

ஒடங்காடாடுதல்

முள்ளு பாய்ஞ்ச ஒடங்காட்டுக்குள்ள
தலையை எட்டிப் பார்த்து ஒளிஞ்சிகிடும் ஒடக்கானை
சுருக்கு கண்ணி வச்சி பிடிச்சிட்டு வந்து
தெருச் சந்தியில சுடுமணல் மூடி
கருங்கல்லையும் மேல் தூக்கி வச்சி
கொலகாரங்கனக்கா சுத்தி நிப்போம் .

நாலு பெயலுவ ஒடக்கானைச் சுற்றி கம்போடு நிக்க
எவனாவது ஒருத்தன் ஓடிப்போய்

அம்மாச்சியின் பொடித்தடையில் பாதியை களவாண்டுட்டு வர
மூக்குப்பொடியை ஏத்திவிட்டு
கிறுகிறுத்து தலைசுற்றும் ஒடக்கான் முன்னால ஓட
தகர டப்பாவுல கொட்டடிச்சி பின்னால நாங்க ஓடுவோம் .

ஒடக்கான் கடிச்சா பெறவு பீயக்கரச்சிதான் குடிக்கனும்னு
எப்பம்பாத்தாலும் வையும் பொன்னுக் கெழவிக்கிட்ட
அப்பன்னா நீ முதல்ல குடிகெழவின்னு
ஒடக்காங்கயிரை கெழவிக்கிட்ட தாரதுமாரி பாவலாக்காட்டி
"குசும்புக்கார பெயயுள்ள" ன்னு கிழவி காரித்துப்புன பெறவு
பளிஞ்சான் காட்டி கோயில் ஆலமரத்துக்கு கூட்டம் ஓடும் .

ஆலம்விழுதுல தலைகீழ தொங்கவிட்டு
ஆளுக்கு மூணு கல்லு கணக்குல
மண்டையிலே குறிவச்சு எரிய
மயங்கிய மாறியே செத்தும் போகுமந்த ஒடக்கானை
முதமாரியே தகர டப்பா கொட்டடிச்சி
குழிதோண்டி ஒன்னுக்கடிச்சி

பெதச்சிட்டு வீட்டுக்கு வந்தா
முறிச்சி வச்ச வேப்பம் கம்போட
எதிர்பார்த்து உக்காந்திருப்பார்
திண்ணையில் அப்பா .

12 comments:

Anonymous said...

Experience talking....

ஜெனோவா said...

என்ன சொல்றது ...போங்க ;-)
நன்றி அனானி நண்பரே !

Anonymous said...

Ungal kathai....
Naan migavum nayssipyan...

புலவன் புலிகேசி said...

நெறைய வாங்கிருக்கீங்களோ???

creativemani said...

கிராமிய வாசனையில் ஒரு கவிதை.. நல்லாருக்குங்க... :)

ஜெனோவா said...

@ அனானி , என்ன சொல்ல வரீங்க .. ஒன்னும் புரியல .

புலவன் புலிக்கேசி, வாங்குனதுல நிறைய வெப்பம் கம்புதான் , சும்மா சுளீர் சுளீர் ... அடப்போங்கங்க இதெல்லாம் அனுபவிக்கனும் .. ஆராயப்புடாது ;-))

அன்புடன் மணி , வாழ்த்துக்கள் நண்பா !

மண்குதிரை said...

ninaichchup paakka iniya anupavam

ஜெனோவா said...

நண்பா , நல்லவேளை கிராமத்தில் வளர்ந்ததால் நமக்கு இது நினைத்துப் பார்க்கவாவது , இருக்கிறது இப்பொழுது . ;-))

வாழ்த்துக்கள் மண்குதிரை, தொடர்வோம் !

பா.ராஜாராம் said...

மிக பிரியமான நெருக்கமான பால்யம் ஜெனோவா! ரொம்ப பிடிச்சு இருக்கு மக்கா!

ஜெனோவா said...

ரொம்ப நன்றி பா.ரா சார் ;-)
மேலும் நீங்க பயன்படுத்துற "மக்கா" , என்னைய மறுபடியும் ஊருபக்கம் கூட்டிட்டு போயிடுது . நீங்களும் நெல்லைக்குப் பக்கமா ?
ஏன்னா அங்க இப்படியொரு சொல்லாடல் உண்டு , "மச்சி" என்ற வார்த்தைக்கு இணையா ..

வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

நான் வாசித்த கவிதைகளில் மிகவும் நெருக்கமானதாகவும்
சீக்கிரம் மறக்க முடியாத ஒன்றாகவும் இந்த கவிதை இருக்கும் ஜெனோவோ.!!!

அழகு !!!!!!! நெஞ்சில் நிற்கும் என்றென்றும் !!

ஜெனோவா said...

முதல் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றிண்ணே !
இம்மாதிரியான ஊக்கங்கள்தான் வாழ்க்கையை தொடர்ந்து நகர்த்துகிறது என்பதே உண்மை !