Wednesday, November 18, 2009

குழந்தையாகிப் பின் ....


ஒவ்வொருவராய்
முன்னால் வந்து ஆச்சர்யம் காட்டியும்
இங்கேப்பாரென சொல்லியும்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
புறக்கணிக்கும்விதமாய்
காலுக்கடியில் ஊர்ந்துக்கொண்டிருந்த
கட்டெறும்பையே
குனிந்து பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை.

9 comments:

Anonymous said...

Cute....

நேசமித்ரன் said...

அதி உன்னதஙகள் குழந்தைகளை கூர்வதில் காணக் கிடைப்பன
இந்தக் கவிதை அத்தகையதோர் தருணத்தை மிக எளிமையாக பதிவு செய்கிறது வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

nesan says..

//அதி உன்னதஙகள் குழந்தைகளை கூர்வதில் காணக் கிடைப்பன
இந்தக் கவிதை அத்தகையதோர் தருணத்தை மிக எளிமையாக பதிவு செய்கிறது வாழ்த்துகள்//

ஆம்.

ஜெனோவா said...

@ அனானி நண்பர் , மிக்க நன்றி !

@ நேசா சார் , உண்மைதான் , பார்த்துகொண்டிருக்கும் சில வினாடிகளிலே என்னெனவோ செய்துவிடுகின்றன இந்த பொடிசுகள் ;-)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

@ பா.ரா சார் , நன்றி ( உங்கள் அப்பா பதிவை படிக்க படிக்க என்னென்னவோ செய்யுது ...என் அப்பாவைவைத்து ஒரு கிறுக்கலும் கிறுக்கியாச்சி... விரைவில் பதிவிடுகிறேன் )

முனைவர் இரா.குணசீலன் said...

நுட்பமான நோக்கு....
அழகிய கவிதை...
நன்றாகவுள்ளது...

ஜெனோவா said...

மிக்க நன்றி முனைவர் அவர்களே , உங்களிடம் வாழ்த்துக்கள் வாங்குவது மோதிரக் கையால் குட்டு பெறுவதைப் போல உள்ளது ;-))

நானும் ஈரோடுக்கு அருகில்தான் எனது பொறியியல் படிப்பை முடித்தேன் நண்பரே .
வாழ்த்துக்கள்

மண்குதிரை said...

rரொம்ப நல்லா இருக்கு ஜெனோ

ஜெனோவா said...

மண்குதிரை அண்ணே ரொம்ப நன்றி !!

இரசிகை said...

:)